தமிழ் சினிமாவில் இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பல படங்களிலும் வேலை செய்தவர் லிவிங்ஸ்டன். இயக்குனராகும் ஆசையில் இருந்த இவரை விஜயகாந்த் ‘பூந்தோட்ட காவல்காரன்’ படம் மூலம் நடிகராக மாற்றினார். அந்த திரைப்படத்தில் வில்லனாக லிவிங்ஸ்டன் நடித்திருந்தார். இவர் தற்போது பேட்டி ஒன்றில் தன் தனிப்பட்ட உரிமையை பேசியிருந்தது நெட்டிசன்களிடயே கோபத்தை ஏற்படுத்தி லிவிங்ஸ்டன்னை விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
அதன் பிறகு சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு காலத்தில் வெள்ளி திரையில் நடிகராகவும் நடித்தார். மேலும், முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து அப்பா மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகள் ஜோவிகா. இவர் தற்போது சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இருந்தாலும், இவர் சீரியல்களில் நடித்து வருகிறார். முதலில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி கடந்த ஆண்டு முடிவடைந்த பூவே உனக்காக என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு தற்போது இவர் அருவி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் லிவிங்ஸ்டன் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், நான் மதம் மாறலாம் என்று நினைத்தேன். கிறிஸ்டியனாக இருந்து எனக்கு போர் அடித்து விட்டது. இதனால் நான் இந்துவாக மாறிவிட்டேன். நான் கிருஷ்ணருடைய பக்தர். அதனால் ஹரே ராமா ஹரே கிருஷ்ணாவில் நான் சேர்ந்து விட்டேன். அதனால் தான் போட்டு வைத்திருக்கிறேன் என்பது போல் பேசியிருந்தார். இதனையடுத்து தற்போது இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பல கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து விமர்சித்து வருகிறார்கள். எப்படி ஒரு மாதம் போர் அடித்து விடும்? நீங்கள் உண்மையாக மதத்தை நேசிப்பவர் இல்லை என்று பலர் விமர்சித்து வருகிறார்கள்.
மறுபக்கம் லிவிங்ஸ்டன் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அரசியலில் இறங்குவதற்கு வாய்ப்பு இருக்கு கூடிய விரைவில் எந் கட்சி என்று அறிவிக்க போகிறார் எனவும் வெள்ளித்திரையில் உள்ள ரசிகர்கள் ஆதரவையும் சின்னத்திரையில் நடித்த ரசிகர்களையும் தன பக்கம் கொண்டு வர முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், தனி மனிதனுக்கு உரிமை உள்ளது அவர் எந்த மதத்திற்கு செல்ல வேண்டும் என்று உரிமை இருக்கு சமூக ஆர்வலர் விமர்சிக்கும் அளவிற்கு ஒன்றும் அவர் எந் தவறும் செய்யவில்லை அவருக்கு எது புடிச்சிருக்கோ அந்த பாதையில் அவர் பயணிக்க தொடங்கிவிட்டார் என சினிமா துறையை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. லிவிங்ஸ்டன் விஜயகாந்த் மீது அதிக அளவு பற்று கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.