திமுக ஆட்சியில் ஆரம்பத்தில் பாராட்டுகளைப் பெற்று தற்போது தனது பதவியை இழக்கும் அளவிற்கு சர்ச்சைகளில் ஈடுபட்டவர் தான் ஆவடி நாசர்! 2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற உடனே அவருக்கு பால்வளத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது ஆரம்பத்தில் தனது பொறுப்பிற்கு சரியான நடவடிக்கைகளை எடுத்தாலும் அதற்கு பிறகு அவரால் எழுந்த சர்ச்சைகள் ஏராளம், தனது கட்சியால் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்திற்கு நாற்காலி எடுத்து வருவதற்கு தாமதம் ஆகியதால் ஒரு நிர்வாகியை ஆவடி நாசர் கற்களை கொண்டு வீசியது சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது, மேலும் அவர் பொது இடங்களில் நடந்து கொண்ட விதம் பொதுமக்களிடையே திமுக விற்கு பின்னடைவை ஏற்படுத்தியதோடு மேடையிலே வைத்து திருத்தணி எம்எல்ஏவின் உதவியாளராக இருந்த சதீஷை தாக்கியதும் இதனால் முதல்வர் ஸ்டாலின் அப்செட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி தொடர்ச்சியான சர்ச்சைகள் இவரது பதவி பறிப்பிற்கு காரணமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் இவரது மகன் ஆஷிம் ராஜா ஆவடியில் குட்டி அமைச்சராகவே செயல்பட்டு வருகிறார் என்ற விமர்சனம் நிர்வாகிகளிடையே எழுந்து அவரது பதவியும் பறிக்கப்பட்டது. இப்படி இவரது பதவி பறிக்கப்பட்டதற்கு பிறகு பெரும்பாலான திமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த ஆவடி நாசர் தற்போது சேலத்தில் நடைபெற உள்ள இளைஞரணி மாநாட்டிற்கு முதல் ஆளாக நிதி வழங்கியுள்ளார். திமுகவின் இளைஞரணி மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளது, அந்த மாநாட்டிற்கான முதல் கட்ட நிதியாக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் நிதியை ஆவடி நாசர் கொடுத்துள்ளார். இப்படி நிதி தருவதன் மூலம் இழந்த அமைச்சர் பதவியை அவர் மீண்டும் பெறுவார் என்ற பேச்சுகளும் தற்போது அடிபட்டு வருகிறது.
திமுக தரப்பிலும் ஆவடி நாசர் செய்த சர்ச்சைகளுக்கு தண்டனையாகவே அவரது துறை பறிக்கப்பட்டது மேலும் அவருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்க முயற்சிகள் நடக்கின்றன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மாநாட்டிற்காக ஆவடி நாசர் கொடுத்த நிதி முதல் கட்டம் தான் எனவும் இதுபோன்று இன்னும் அதிக தொகையை நிதியாக கொடுக்க அவர் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் எனது பதவியை பறித்ததற்கான கோபமும் கட்சி தலைமை மீது எந்த அதிருப்தியும் இல்லை என்பதை ஆவடி நாசர் மாநாட்டில் முதல் கட்ட பணத்தை தெரிவித்துள்ளார் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னணியை விசாரித்த பொழுது ஆவடி நாசர் பதவியை திமுக தலைமை பறித்ததால் அவர் அப்செட்டாக இருந்ததாகவும் இதனால் விரைவில் அமைச்சர் பதவியை பெற்று விட வேண்டும் என்பதற்காக இந்த ஒரு நடவடிக்கை ஆவடி நாசர் எடுத்துள்ளார் இதன் மூலம் திமுக தலைமையின் அமைச்சரவை மாற்ற இருப்பது தெரிந்து தற்போது உதயநிதியிடம் முன்பதிவு செய்து வைக்க வேண்டும் என்பதற்காக இளைஞரணி மாநாட்டிற்கு ஒன்றரை கோடி ரூபாயை நாசர் எடுத்துக் கொடுத்ததாக தெரிகிறது. மேலும் எப்படியாவது அமைச்சர் பதவியை மீண்டும் வாங்கி விட வேண்டும் என்பதற்காக ஆவடி நாசர் குறியாக இருக்கிறார் என தகவல்கள் கிடைத்துள்ளன. இது தெரிந்து மற்ற அமைச்சர்களும் உதயநிதியிடம் கொண்டுவந்து மாநாட்டிற்காக கோடி கோடியாக பணத்தை கொடுப்பார்கள் என அறிவாலய தலைமை எதிர்பார்த்து வருகிறது. மேலும் இந்த விவகாரம் தெரிந்து மற்ற அமச்சர்களும் பெரும்பாலான தொகையை மாநாட்டிற்கு கொடுக்க வருவார்கள் என பொதுச்செயலாளர் துரைமுருகன் வேறு அறிவாலயத்தில் கூறி வருவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது....