ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதிக்கு அருகே உள்ள துறைமுகத்தில் மீனவர்களுக்கான கலந்துரையாடல் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா, மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் இந்த கூட்டம் 4:00 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் 8 மணிக்கு தொடங்கியது சற்று சலசலப்பை ஏற்படுத்தியது இது மட்டும் அல்லாமல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள துறை அமைச்சர் எல் முருகன் ஆகியோரை நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி நிகழ்ச்சி வரவேற்பின் போது ஒன்றிய அரசு என்று கூறியதால் அங்கிருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து மத்திய அரசு என்று கூறுங்கள் என்று கூறினார்.
மேலும் நவாஸ் கனி மத்திய அரசு என்று கூற முடியாது என்று கூறியதால் கோபமடைந்த பொதுமக்கள் நீ பேசியது போதும் மேடையில் இருந்து கீழே இறங்கு என்று கோபத்துடன் கூறினார். எனவே கூட்டத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்ட நிலையில் பர்சோத்தம் ரூபலா நவாஸ் கனியிடமிருந்து மைக்கை வாங்கி பேச தொடங்கினார் இது மட்டுமில்லாமல் நவாஸ் கனி மத்திய அமைச்சரிடம் விளக்கம் அளிக்க முயன்ற போது நான் யூனியன் மினிஸ்டர் என்பதை தான் ஒன்றிய அரசு என்று கூறினேன் என்று கூறினார் ஆனால் அதை சிறிதும் கண்டு கொள்ளாமல் மேடையில் பேசிவிட்டு சென்றார் பர்சோத்தம் ரூபலா. இவ்வாறு மத்திய அரசு என்று முறையாக கூறாமல் ஒன்றிய அரசு என்று கூறியதால் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியை பொதுமக்கள் மேடையில் வைத்து சம்பவம் செய்து விட்டனர்,
இவ்வாறு நவாஸ் கனி ஒன்றிய அரசு என்று பேசியதால் பாஜகவினர் அனைவரும் கோபமடைந்த நிலையில் நவாஸ் கனி ஒழிக என்று கூச்சலிட்டு ஆர்ப்பரித்தனர் இதனால் சாயல்குடி பகுதியில் மீனவர்கள் இருக்கும் இடம் முழுவதும் மிகவும் பரபரப்பான சூழலில் காணப்பட்டது இந்நிலையில் நிலைமையை புரிந்து கொண்ட மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நவாஸ் கனியை அங்கிருந்து தனது காரில் ஏற்றி சென்றார். இதனால் நீண்ட நேரம் நடைபெற இருந்த மீனவர்களுடனான கலந்துரையாடல் சிறிது நேரத்திலேயே முடிவடைந்ததால் மீனவர்கள் தங்கள் கோரிக்கைகளை மத்திய அமைச்சர்களிடம் கூற முடியாமல் போனது மன வருத்தத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து திமுகவில் மீதமுள்ள 36 எம்.பிகளும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர் என்று அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன, காரணம் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசினால் ஒன்றியம் என்று கூற வேண்டி இருக்கும் எங்கே ஒன்றியம் என்று கூறினால் நவாஸ் கனிக்கு ஏற்பட்டது போல தமக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் பதுங்குகின்றனர் என அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறி வருகின்றனர். மேலும் கடந்த மாதம் கரூரில் எம்.பி ஜோதிமணியை கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்டு ஓடவிட்டதும், திருச்சியில் எம்.பி திருநாவுக்கரசரை மக்கள் கேள்வி எழுப்பி எம்.பி ஓட்டம் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது...மேலும் நவாஸ் கனிக்கு நடந்ததை மையப்படுத்தி இனிவரும் நாட்களில் யாரும் ஒன்றிய அரசு என கூறுவதற்கு பயப்படுவார்கள் என தெரிகிறது, இவ்வாறு நவாஸ் கணிக்கு ஏற்பட்ட சம்பவத்தை அடுத்து திமுகவினர் அனைவரும் கூட ஒன்றியம் என்ற சொல்லை கூறுவதற்கு தெரித்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது....