2014 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு போக்குவரத்து துறையில் பணியாளர்களின் நியமித்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது. இதற்கு முன்னதாக மத்திய குற்றப்பிரிவு மற்றும் சிபிசி ஐடி போலீசாரும் தனியாக மூன்று வழக்குகளை செந்தில் பாலாஜி மீது பதிந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் கீழ் பல விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி சிவி கார்த்திகேயன் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளலாம் என்று அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டது.
இந்த ஐந்து நாட்கள் விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகள் அதற்கு செந்தில் பாலாஜி அளித்த பதில் சோதனையின் பொழுது கைப்பற்றப்பட்டவை என அனைத்து விவரங்களையும் கொண்ட 3000 பக்க ஆவணங்களையும், 120 பக்க குற்ற பத்திரிகையையும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதற்குப் பிறகு செந்தில் பாலாஜியின் வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால் அங்கும் இவ்வாவணங்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்டு அதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் தற்போது வெளிவந்துள்ளது. ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை அதற்குப் பிறகு காவலில் எடுத்து அமலாக்க துறையால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை என அனைத்திலும் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டப்பட்டவர் என்பது நிரூபணம் ஆகியும், தனது அதிகாரத்தை அவர் தவறாக பயன்படுத்தி மக்களிடமிருந்து பணம் பெற்றுள்ளார் என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த மோசடியில் அமைச்சரின் இரண்டு உதவியாளர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள் என்பதும் மற்ற சில சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய நபர்கள் வேலைக்காக பிறரிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு செந்தில் பாலாஜியின் உதவியாளராக இருக்கக்கூடிய சண்முகம் என்பவர் அக்கவுண்டில் பணத்தை போட்டதாகவும் அது பிறகு செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மக்களின் பணியாளராக இருக்கக்கூடிய ஒரு அமைச்சர் இப்படி ஒரு ஆசையை மக்களிடம் காட்டி மோசடி இதில் செய்துள்ளார் எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டுள்ளது, வசூலிக்கப்பட்ட பணம் யார் யாருக்கு சென்றுள்ளது அதில் சிலருக்கு ஏன் பணி நியமனம் வழங்கப்படவில்லை, தரவரிசை பட்டியலில் என்ன முறைகேடு நடைபெற்று உள்ளது, பணம் கொடுத்தவர்கள் நேர்காணல் முடிந்த பிறகு அமைச்சரின் உதவியாளராக இருக்கக்கூடிய சண்முகம் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரின் நேரில் சந்தித்து பதவி நியமனத்தை பெற்றுள்ளனர் என்பதற்கான ஆதாரங்களும் உள்ளதாக சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் தெளிவாக இடம்பெற்றுள்ளது.
இது மட்டுமல்லாமல் இந்த குற்ற பத்திரிக்கையில் செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இந்த குற்றத்தை மேற்கொண்டுள்ளார் என்பது ஆணித்தரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு அமலாக்க துறையை பொறுத்தவரை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது மிகவும் தவறானது என்றும் இந்த குற்றத்தை புரிந்தவர்களுக்கு கண்டிப்பாக சிறை தண்டனை கிடைக்கும் என்றும் சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர். அப்படி சிறை தண்டனை கிடைக்கும் பட்சத்தில் செந்தில் பாலாஜி குறைந்தது ஆறு வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படலாம் எனவும், அப்படி ஆறு வருடங்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் செந்தில் பாலாஜி திமுகவில் இருந்தே துரத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன....