24 special

செந்தில் பாலாஜி வழக்கின் தற்போதைய நிலைமை!! ரொம்பவே கவலையில் நடத்தப்பட்ட சம்பவம்...

senthilbalaji
senthilbalaji


மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தர்வைத்துறையில் அமைச்சராக இருந்த பொழுது அரசு நடத்தும் டாஸ்மார்க் கடைகளில் விற்கப்படும் ஆல்கஹால்களுக்கு பத்து ரூபாய் அதிகமாக வைத்து விற்கப்பட்டதாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அது குறித்து வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது. மேலும் இதற்கு முன்பாக அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வந்த நிலையில் அரசு வேலை வாங்கி தருவதாக பல பேரிடம் பணம் வாங்கி ஏமாற்றி வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் அதன் பிறகு திமுகவில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராகவும், அடுத்ததாக நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகவும் பதவியேற்றார். 


இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி மீது சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம்  தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த ஜூன் 2023 ஆம் ஆண்டில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரை கைது செய்த பொழுது திடீரென்று செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து அதன் பிறகு விசாரணையை தொடங்கினர். இதில் தொடர்ந்து விசாரணையும், சிறையிலும் இருந்து வந்த செந்தில் பாலாஜி எப்படியாவது வெளியில் வர வேண்டுமென்று தொடர்ந்து அவரின் குழு தீவிரமாக செயல்பட்டு பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி அதன் பிறகு போலீஸ் பாதுகாப்புடன் புலல் சிறைக்கு மாற்றப்பட்டு சிறைக்குள்ளே உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து நீதிமன்ற காவலில் இருக்கும் கால அவகாசமானது நீண்டு 48 வது முறையாக நீண்டு கொண்டு சென்றது. இவ்வாறு நீதிமன்ற காவல் அவகாசம் நீண்டு கொண்ட சென்ற நிலையில் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் குழுவும் முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என அனைத்து நீதிமன்றங்களிலும் தொடர்ந்து தங்களின் முயற்சிகளை செய்து வந்தது.

அது மட்டுமல்லாமல் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து அதன் பிறகு தொடர்ந்து ஜாமீனுக்காக போராடி வந்த நிலையில் இன்னுமும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இவ்வாறு காவலில் வைத்து ஒரு வருடம் கழிந்த நிலையில் தொடர்ந்து நிராகரிப்பு மட்டும் கிடைத்துக் கொண்டு வருகிறது.  இதனைத் தொடர்ந்து  செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் குழு மற்றும் திமுகவின் சட்டத்துறையை சேர்ந்தவர்களிடம் விசாரிக்கும் பொழுது அவர்கள் கூறியது என்னவென்றால்..

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வேண்டுமென்றே ஜாமின் தராமல் இருப்பதாகவும், தொடர்ந்து நிராகரிப்புகள் செய்து வருவதாகவும் கூறுகின்றனர். மேலும் விசாரணைக்கு தங்கள் பக்கம் இருந்து முழு ஒத்துழைப்பு தருவதாகவும், ஆனால் பல்வேறு காரணங்களை காட்டி ஜாமீன் தருவதை தொடர்ந்து மறுத்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை வேண்டுமென்றே அமலாக்கத்துறை திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக கூறியுள்ளனர். செந்தில் பாலாஜி அரசியலில் பதவியில் இருக்கிறார் என்று பேசிக் கொண்டிருந்ததை தொடர்ந்து அவர் அமைச்சர் பதவியும் ராஜினாமா செய்து வந்த நிலையில் தற்பொழுது தொடர்ந்து விசாரணையில் பல ஏற்ற இறக்கங்கள் கண்டு வருகிறோம். 

இருந்தாலும் சில இடங்களில் முன்னேற்றங்களையும் பார்த்துதான் வருகிறோம். சமீபத்தில் கூட அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் போன்றவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகியும் பாலாஜி தரப்பில் ஒத்துழைப்பு அளிப்பதாகவும், அப்பொழுது விசாரணை முன்னோக்கி செல்வதாக கூறி ஜாமீன் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் செந்தில்பாலாஜிக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்... இதுகுறித்து சிலரிடம் விசாரித்த சமயம், செந்திபாலாஜி மனதளவில் மட்டுமல்ல உடல் அளவிலும் மிகுந்த சோர்வுடன் உள்ளார் அதனால் ஏற்பட்டது இந்த உடன் நலக்குறை என கூறினார்கள், ஆனால் ஒரு சிலரோ செந்திபாலாஜியை அமலாக்கத்துறை இப்பொழுது வெளியில் விட அனுமதிக்காது எனவே செந்தில்பாலாஜிக்கு உடல் நலக்குறைவு என காட்டினால் மட்டுமே அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என தெரிந்துதான் இந்த சம்பவம் எல்லாம் நடக்கிறது எனவும் கூறினார்கள்.. இதுகுறித்து மேலும் இரண்டு தினங்கள் சென்றால் தான் நிலைமை தெரியும் எனவும் கூறப்படுகிறது...