அதிமுகவின் முன்னாள் அமைச்சராக இருந்த எம் ஆர் விஜயபாஸ்கர் மீது கடந்த ஜூலை 14ஆம் தேதி ரூபாய் 100 கோடி நில மோசடி வழக்கு தொடர்பாக கரூரில் உள்ள சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து செல்வராஜ் மாரியப்பன் மற்றும் பிரவீன் உட்பட ஏழு பேர் மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வந்தது. மேலும் இதனைத் தொடர்ந்து காட்டூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்னும் தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில் வாங்கல் காவல் நிலையத்தில் பாஸ்கரின் சகோதரரான சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் மேலும் பிரவீன் உட்பட அனைவருமே தலைமறைவாகினர். இதனைத் தொடர்ந்து அவர்களை 14 தனிப்படைகள் தேடி வருவதாகவும், தற்பொழுது சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவர்கள் கைதாவதற்கு முன்பாகவே முன்ஜாமின் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் முன் ஜாமின் கேட்டு மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் எம் ஆர் விஜயபாஸ்கர் தரப்பானது சார்பதிவாளர் அளித்த புகாரியின் அடிப்படையில் நிகழ்ந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த 34 நாட்களாக தலைமறைவாகியிருந்த அதிமுகவின் கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமாக இருந்த எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் உட்பட இருவரையும் கேரளாவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து கைது செய்து தற்பொழுது கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எண் ஒன்றின் அடிப்படையில் ஆஜர் படுத்தினர். இதனை தொடர்ந்து இவர்களை வரும் ஜூலை 31ஆம் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைக்குமாறு நீதிபதி பரத் குமார் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து தொழிலதிபரான பிரகாஷ் வாங்கல் காவல் நிலையத்தில் ஏற்கனவே அளித்திருந்த புகாரின் அடிப்படையில் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரின் மீதும் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கும் கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2 அடிப்படையில் நீதிபதி மகேஷ் முன்பு ஆஜர் படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் ராஜர்படுத்த உள்ள நிலையில் தகவல் அறிந்து நூற்றுக்கணக்கான அதிமுக உறுப்பினர்கள் கூடியதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி விசாரணையின் போது வில்லிவாக்கத்தை சேர்ந்த காவல் ஆய்வாளராக இருந்து வந்த பிரித்விராஜ் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு தொடர்ந்து உதவி செய்து வந்ததாகவும், அதனால் அவரை சமீபத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை ஜூலை 22ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தற்பொழுது கரூர் மாவட்டம் முழுக்க அதிமுகவின் முன்னாள் அமைச்சரான எம் ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு இருப்பது குறித்த செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் அதிமுக வைத்திருந்த நற்பெயர்களுக்கும் தற்பொழுது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது. மேலும் விஜயபாஸ்கர் புதிய வழக்கிலும் சிக்கினால் கண்டிப்பாக அடுத்த தேர்தல் வரை வெளியே வர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது....