பதவி காலம் முடியும் முன்பு தரமான சம்பவம் செய்த டிஜிபி அடுத்த மாதம் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவின் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில் தற்போது ஆளும் கட்சி எதிர் கட்சி என பார்க்காமல் சைலந்திர பாபு போட்ட உத்தரவு தான் தற்போது ஒட்டு மொத்த தமிழக காவல்துறை வட்டாரத்திலும் பேசு பொருளாக இருக்கிறது.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காவல்துறையின் தலைவராக பொறுப்பேற்ற டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு பல்வேறு அடுத்தடுத்த சவால்கள் காத்து இருந்த சூழலில், தமிழகத்தின் பல பகுதிகளில் திமுகவினர் மற்றும் அமைச்சர்களின் தலையீடுகள் காவல்துறையில் அதிகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின.
அதனை உறுதி படுத்துவது போல் அடுத்தடுத்து தமிழகத்தில் அரங்கேறிய நிகழ்வுகள் காவல்துறை மீதும் அதன் தலைவராக இருக்கும் சைலேந்திர பாபு மீதும் எழுந்தன, இந்த நிலையில் கள்ள சாராய விவகாரத்தில் டிஜிபி போட்ட உத்தரவு மிக பெரிய அதிரடி மாற்றத்தை உண்டாக்கி இருக்கிறது.
கள்ள சாராயம் விற்ற வழக்கு என பதிவு செய்த மரக்கானம் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து இருப்பதாக டிஜிபி அலுவலகம் செய்தி வெளியிட்டது, இதன் மூலம் இந்த குற்றத்தில் தொடர்புடைய அனைத்து நபர்கள் மீதும் கட்சி பேதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதுடன் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் பலரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாத சூழல் உண்டாகி இருக்கிறதாம்.
காவல்துறை அதிகாரிகள் நேர்மையாக பணி செய்ய நினைத்தாலும் அவர்களுக்கு பல்வேறு வழிகளில் அழுத்தம் இருப்பதால் எந்த ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் அழுத்தத்திற்கு உட்பட்டு ஆகவேண்டிய சூழல் இருக்கிறது. இந்த நிலையில் எந்த அழுத்தத்திற்கும் உட்படாமல் கள்ள சாராய வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து டிஜிபி போட்ட உத்தரவு பல்வேறு வழிகளில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு சட்டத்தின் பிடியில் இருந்து எளிதில் தப்பிக்க முடியாத சூழலை உண்டாக்கி இருக்கிறதாம்.
பணி காலம் முடிவதற்கு ஒரு மாதம் முன்பாக தமிழகத்தில் கள்ள சாராயம் மற்றும் கஞ்சா போன்ற பொருள்களுக்கு முற்றிலும் தடை செய்யும் விதமாக தமிழக டிஜிபி எடுத்து இருக்கும் இந்த முயற்சி அரசியல் களத்தில் பல்வேறு நபர்களாலும் பாராட்ட பட்டு வருகிறது, கோவை குண்டு வெடிப்பு விவகாரத்தில் தீவிரவாத தாக்குதல் இல்லை என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தது அவரது காவல் துறை வாழ்க்கையில் விழுந்த கரும் புள்ளியாக பார்க்க பட்ட நிலையில்..,
மறக்கானம் கள்ள சாராய வழக்கில் டிஜிபி எடுத்த முடிவு அரசியல் கடந்து பாராட்டும் சூழலை உண்டாக்கி இருக்கிறது அதிலும் குறிப்பாக ஆளும் கட்சி எதிர் கட்சி என யாராக இருந்தாலும் கள்ள சாராயம் விற்றால் தயவு பார்க்காமல் உள்ளே தூக்கி வையுங்கள் என டிஜிபி போட்ட உத்தரவு தமிழகத்தில் நேர்மையாக பணி செய்து வரும் பல்வேறு காவலர்களுக்கு உந்துதலாக அமைந்து இருக்கிறதாம்.