தொடர்ச்சியாக இரண்டு தேர்தலில் தோல்வியுற்று அதிமுகவின் முக்கிய தலைவராக இருந்த ஜெயலலிதா அம்மாவின் மறைவிற்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு திமுக பலத்த கூட்டணியுடன் தேர்தலை வெற்றி பெற்றது. திமுகவின் கூட்டணியில் தமிழக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பங்கு முக்கியமானதாகும் பார்க்கப்படுகிறது. ஆனால் திமுகவிற்கு விசிக, நம் தலைமையின் கீழ் வந்து சேர்ந்திருக்கும் ஒரு கட்சி என்று பார்க்கப்படுகிறது என என்னும் வகையில் பல்வேறு சம்பவங்கள் தற்போது அரங்கேறியுள்ளது.
வேங்கை வயல் பிரச்சனையில் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காதது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூற முடியாமல் திணறினார் திருமாவளவன். அதற்கு அடுத்ததாக கடந்த பிப்ரவரி மாதத்தில் திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்த பேசிக் கொண்டிருந்த விசிக தலைவர் திருமாவளவன் கூட்டணி கட்சிக்காரர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி என்றால் அது கசப்பாகத்தான் இருக்கும் ஆனால் எங்களது ஓட்டு மட்டும் அவர்களுக்கு இனிப்பானதாகவும் என்று கூறி திமுகவை மறைமுகமாக சாடினார்.
மேலும் பல கூட்டங்களில் கூட்டணி கட்சிக்காரர்கள் தங்கள் கட்சியின் கொடிகளை ஏற்றுவதற்கு பகிரங்க எதிர்ப்பை தெரிவிக்கின்றனர் என்றும் தனது குற்றச்சாட்டை திருமாவளவன் முன்வைத்தார். இப்படி திருவாரூரில் திருமாவளவன் எங்களின் கொடிகளை கூட அவர்கள் ஏற்ற அனுமதி தருவதில்லை என்று மறைமுகமாக திமுக அரசை விமர்சித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவர் இப்படி ஒரு குற்றச்சாட்டை திருவாரூர் ஆர்ப்பாட்டத்தில் முன்வைத்து மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை மற்றொரு இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிகளை ஏற்றி விடாமல் சம்பவம் செய்துள்ள நிகழ்வு விசிக'வை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் அ. வாசதேவனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி நடப்பட்டிருந்தது. ஆனால் அந்த கொடி அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதாக கூறி வட்டாட்சியர் அளித்த புகாரியின் அடிப்படையில் இரவோடு இரவாக காவல்துறையினர் அந்த கொடியை அகற்றி உள்ளனர்.
எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி இரவோடு இரவாக தங்கள் கொடிகளை அகற்றியதால் கொந்தளித்த விசிக மாவட்டச் செயலாளர் தனபால் பெண் வட்டாட்சியர் மீது கடும் கோபம் கொண்டுள்ளார். இதற்காக பெண் வட்டாட்சியர் விசிக மாவட்ட செயலாளர் தனபால் மீது வழக்கு பதிவும் செய்துள்ளார். உடனடியாக தங்களது கொடிகள் அகற்றப்பட்ட விவகாரமும் பெண் தாசில்தாரை திட்டிய விவகாரமும் திருமாவளவன் காதுகளுக்கு சென்றது. இந்த சம்பவம் பற்றி அப்பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கூறும் பொழுது, கூட்டணி ஆட்சியில் தான் இருக்கிறோம் என பெயர் மற்றும் ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சி என்று அழைக்கப்பட்டாலும் நாங்கள் நினைத்த ஒரு இடத்தில் கூட எங்கள் கட்சியின் கொடிகளை ஏற்ற முடியவில்லை. எங்கு போராட்டம் நடத்தினாலும் அனுமதித்தர மறுக்கிறார்கள் சரி கொடியாவது ஏற்றலாம் என்றால் அதற்கும் அனுமதி தருவதில்லை.
மேலும் மரியாதைக் குறைவாகவும் நடத்துகிறார்கள் இப்படி நடக்கும் சூழலில் நாங்கள் எதிர்க்கட்சியின் கூட்டணிகளாக இருந்து கொண்டு போகலாமே என ஆதங்கத்துடன் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன, கள்ளக்குறிச்சியிலும் தங்களது கொடிகளை ஏற்ற விடதா சம்பவம் திருமாவளவனுக்கு சென்றுள்ளதால் எப்பவும் நம்மளுடைய கொடி கூட ஏற்றி விடமாட்டார்கள் இதுதான் தர்மம் விடுங்கள் சமையம் வரட்டும் பார்த்துக் கொள்கிறேன் என திருமாவளவன் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.