24 special

வாயைத் திறந்தார் அதிகாரி.... சிக்கப்போகும் அந்த முக்கிய அறிவாலய தலைவர்...

enforcement department,sand quarry
enforcement department,sand quarry

 தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி துவங்கிய மணல் ரெய்டு விவகாரம் தற்பொழுது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் முதலில் 34 இடங்களில் சோதனை ஆரம்பித்த பொழுது இது வழக்கமான சோதனையாக தான் இருக்கும் என ஊடகங்கள் செய்தி பரப்பினர். ஆனால் அதனை தொடர்ந்து நடந்த விஷயங்கள் தான் மிகப் பெரும் அதிர்ச்சியை ஆளும் திமுக தரப்பிற்கு கொடுத்தது. 


தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுகிறது, சட்டவிரோதமாக மணல் வியாபாரம் செய்யப்பட்டு அதன் மூலம் பல கோடி ரூபாய்கள் அரசுக்கு முறையாக கணக்கு காட்டாமல் இருக்கிறது மணல் மாஃபியா கும்பல் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் 34 இடங்கள் என ஆரம்பித்த சோதனை அடுத்தடுத்த கட்டங்களை நெருங்கியது, முதலில் மணல் குவாரிகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது எவ்வளவு மணல் அள்ளப்பட்டிருக்கிறது என்ற தோராயமான கணக்கு அமலாக்கத்துறை வசம் இல்லை, ஆனால் அதன் பிறகு அமலாக்கத்துறை தனது முழு சக்தியையும் பிரயோகித்தது. 

அதன் மூலமாக மணல் மாஃபியா மொத்த கும்பலையும் சுற்றி வளைத்தது அமலாக்கத்துறை அதிலும் குறிப்பாக இவ்வளவுதான் மணல் அள்ளப்பட்டு இருக்கிறது என்ற அமலாக்கதுறையின் யூகத்தையும் தாண்டி பல நூறு டன் கணக்கில் மணல் சுரண்டப்பட்டிருப்பது அமலாக்கத்துறைக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் மணல் அள்ளியதை கண்டுபிடிக்க முடியும் என அமலாக்கத்துறை அடுத்த கட்டமாக ஐஐடி நிபுணர் குழு உதவியை நாடியது. 

ஐஐடி நிபுணர் குழு செயற்கைக்கோள் உதவியுடன் மணல் குவாரிகளை படம் பிடித்து எவ்வளவு மணல் அள்ளப்பட்டிருக்கிறது கணித்து சொல்லியதாக என தற்போது அமலாக்கத்துறைக்கு அறிக்கை கொடுத்திருப்பதாகவும் அதனை வைத்து அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கிட்டத்தட்ட 4000 கோடி அளவிற்கு மணல் அள்ளப்பட்டு இருப்பதாகவும் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. 

இந்த நிலையில் ஒருபுறம் அமலாக்கத்துறை தொழில்நுட்பத்தை வைத்து எவ்வளவு மணல் அள்ளப்பட்டு இருக்கிறது என ஆராயும் அதே வேளையில் மறுபுறம் தமிழகத்தைச் சேர்ந்த 10 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா உள்ளிட்டோர் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. 

இதில் முத்தையா கிட்டத்தட்ட 37 நாட்களாக தலைமறைவாக இருந்தார் என கூறப்படுகிறது, ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் முத்தையாவையும் அமலாக்கத்துறை பிடித்து விசாரணைக்கு வரவழைத்தது. இந்த நிலையில் அமலாக்கத்துறை விசாரணை செய்வது தொடர்பாக நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு வழக்கு தாக்கல் செய்தது அமலாக்கத்துறை அரசு அதிகாரிகளை விசாரிக்க கூடாது என்கின்ற ரீதியில் தாக்கல் செய்த அந்த வழக்கின் வாதம் முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை தரப்பில் அதிரடியாக நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அந்த அறிக்கையில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது தொடர்பாக அதிகாரிகளை வரவழைத்தபோது அவர்கள் முதலில் வரவில்லை எனவும் பின்னர் வந்த அதிகாரிகளில் ஒருவர் அனைத்து உண்மையையும் கொட்டிவிட்டார் எனவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது அந்த அதிகாரி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் நேரடி உதவியாளர் உமாபதி என்பவர் எங்களை விசாரணைக்கு போகக்கூடாது எனக் கூறினார், அதனால்தான் நாங்கள் வரவில்லை எனக்கூறி மொத்த உண்மையையும் சொல்லிவிட்டார் எனவும் அமலாக்கத்துறை தரப்பில் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இப்படி அமைச்சர் துரைமுருகனின் நேரடி உதவியாளரே அதிகாரிகளை மிரட்டிய விவகாரம் அமலாக்கத்துறைக்கு ஆவணமாக தற்பொழுது கையில் உள்ளது, அதன் காரணமாக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அமலாக்கத்துறை துரைமுருகனை நெருங்கலாம் அல்லது துரைமுருகனுக்கு நேரில் ஆஜராகம்படி சம்மன் அனுப்பலாம் அல்லது துரைமுருகனை சாட்சியங்களை கலைக்க பார்த்தார் எனக் கூறி கைது செய்யப்படலாம் எனவும் சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றன. 

இந்த மணல் விவகாரத்தில் என்ன நடக்குமோ என அறிவாலய தரப்பு ஒவ்வொரு நாளும் பதைபதைப்பில் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.