24 special

திமுக கவுன்சிலர் ராஜினாமா... பரபரப்பாகும் நெல்லை..!

Nellai counsilor
Nellai counsilor

நெல்லையில் திமுக கவுன்சிலர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாளையங்கோட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 7-வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் இந்திரா. இவர் தனது கணவரும், தி.மு.க. நிர்வாகியுமான சுண்ணாம்பு மணி மற்றும் அப்பகுதி மக்களுடன் வந்து மாநகராட்சி கமிஷனரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இந்த கடிதத்தை தன்னிடம் வழங்க வேண்டாம் மேயரிடம் தான் வழங்க வேண்டும் என தெரிவித்தார். கவுன்சிலர் ராஜினாமா செய்தது திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


தனது வார்டில் எந்த வித செயல்பாடுகளும் மக்களுக்கு செய்து கொடுக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே கூறி வருகிறோம் மேயர் கண்டுகொள்ளவில்லை. மக்கள் அன்றாட பயன்படுத்தும் சாலை வசதிகளை மேம்படுத்தவில்லை ஒரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார். இதற்கு முழு காரணமே நெல்லை மாவட்ட மேயர் சரவணன் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார். நெல்லை மாநகராட்சி மேயராக ஆளும் கட்சியான திமுகவை சேர்ந்த சரவணன். மொத்தம் 55 வார்டுகளை கொண்ட அப்பகுதியில் மேயர் மற்றும் ஆளும் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் இடையே  தொடர் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. குறிப்பாக மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் அளவுக்கு பிரச்சனை சென்றது.

இந்த விவகாரம் பூதாகரமாக திமுக தலைமையில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசுவை நெல்லைக்கு அனுப்பிவைத்து பிரச்னையை தீர்வு காண முடிவெடுத்தது. அதன் பின் சமரச பேச்சு நடத்தியும் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை என கூறப்படுகிறது. பிறகு மேயருக்கு எதிராக தொடர் போராட்டம் உள்ளிருப்பு போராட்டம் என நடத்தி வந்தனர். தொடர் சர்ச்சையாக இருந்து வந்த மேயராக எதிராக கவுன்சிலர் இந்திரா ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளார். இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையானதை எங்களால் செய்ய முடியவில்லை. நிதி ஒதுக்கவில்லை மேயரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை அதனால் ராஜினாமா செய்கிறேன் என கூறினார். ஆரம்பத்தில் இருந்து மேயருக்கு எதிராக பிரச்சனை நீடித்து வந்த நிலையில் தற்போது கவுன்சிலர் ராஜினாமா செய்வதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவுக்கு தொடர் நெருக்கடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.