தமிழகத்தில் பிரபல நகைக்கடையில் நேற்று நள்ளிரவில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை காவல் துறை விசாரிக்கும் நிலையில், கொள்ளையடித்தவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்க மும்முரம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் அதிகரித்து வருகிறது, குறிப்பாக சிசிடி டெக்னலாஜி வளர்ந்த நிலையிலும் கொள்ளை கும்பல் அதற்கு அசருவதாக தெரியவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர், கலசப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தமிழ்நாட்டில் உள்ள சட்ட ஒழுங்கு மற்றும் வங்கிகளின் கேமரா நிலைப்பாட்டை சுட்டி காட்டியது.
இந்த சம்பவம் தொடர்பாக வாடா மாநிலத்திற்கு தனிப்படை காவலர்கள் சென்று விசாரித்ததில் 10 க்கும் மேற்பட்டோரை கைது செய்து கொள்ளையடித்த பணத்தை மீட்டனர். அதன் பிறகும் கொள்ளை சம்பவம் ஓய்ந்தபாடில்லை. தொடர்ந்து ஆங்காங்கே கொள்ளை சம்பவம் நடந்து தான் வந்தது. இந்நிலையில் முன்னணி நகைக்கடையாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுகாஸ் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கிளைகளை இயக்கி வருகிறது. அதனை ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஜோஸ் ஆலுகாஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த கடையை வழக்கம் போல் இன்று காலை கடையை திறந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
கடையை திறந்தவுடன் அங்குஉள்ள ரேக்கில் நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர் ஊழியர்கள். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சுவற்றில் துளையிட்டு மர்ம நபர் ஒருவர் புகுந்து கொள்ளையடிக்க உள்ளே வந்திருக்கலாம் என்றும் ஒரு நபர் மட்டுமே சிசிடிவி காட்சியில் தெரிந்திருப்பதாகவும், சுமார் 200 சவரன் நகைகளை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தடார்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொள்ளை சமபவம் தொடர்பாக 5 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறுபக்கம் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள முன்னணி நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீடிரென்று சோதனையில் ஈடுபட்டனர். இதனால் பல முன்னணி நகைக்கடை உரிமையாளர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ச்சியாக திருச்சியில் உள்ள நகை கடையிலும் சோதனையில் ஈடுபட்டது அமைச்சர்கள் தொடர்ந்து நகை கடைகளில் சோதனை செய்வதால் எதை தேடி வருமானவரித்துறை சோதனை ஈடுபட்டுள்ளனர் என்று சந்தேகம் எழுந்தது. இந்த சோதனையில் கணக்கில் வாராத பல லட்சம் சிக்கியதாகவும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் கசிந்தன. இந்நிலையில் கோவையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் சோதனைக்கு பயந்து எதாவது தில்லுமுல்லு செய்யப்டுள்ளதா என்ற கோணத்திலும் காவல் துறை விசாரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.