அதிமுக ஆட்சி காலத்தில் தென் மாவட்ட மக்கள் வசதிக்காக கிளாம்பாக்கம் பகுதியில் பேருந்து நிலையத்தை அமைக்க திட்டம் போட்டு அதற்கான முன்னேற்பாடுகளை செய்து தொகையும் ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் அடுத்த ஆட்சியாக திமுக வந்ததும் அவர்களும் அந்த திட்டத்தை முடித்து மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வந்தனர். கடந்த மாதம் அவசர அவசரமாக திறந்து மக்கள் இடத்தில குழப்பத்தை ஏற்படுத்தினர். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து தமிழக அரசை விமர்சனம் செய்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் மட்டும் 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் 6 பேருந்து நிலையங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த 30ம் தேதி சென்னையில் குறிப்பாக தென் மாவட்ட மக்கள் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் தமிழக அரசு சார்பில் திறக்கப்பட்டது. இதில் தென் மாவட்ட மக்களும் புதிய பேருந்து நிலையத்திற்கு படையெடுத்தனர். அப்போது, அந்த பேருந்து நிலையத்தில் ரிசர்வ் செய்தால் மட்டுமே இங்கு இருக்கக்கூடிய பேருந்தில் செல்ல முடியும் என்பதை அரசு அறிவித்திருந்தது.
ஆனால், அங்கு அனைத்து மக்களுக்கு சென்றனர். இதனால் மக்கள் செய்வதெரியாமல் உன்ன உணவு மற்றும் போதிய வசதி இன்றியும் கஷ்டப்பட்டு வநதனர். இந்த தகவல் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு தெரியவர அனைத்து மக்களும் பயன்படுத்தும் விதமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஆனாலும், புதிய பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து இயக்கப்படுவத்தில்லை என்றும் கோயம்பேட்டில் இருந்து புறப்படும் பேருந்து கிளாம்பாக்கம் சென்று தான் செல்கிறது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில், "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டவர்களை புலம்ப வைத்துள்ளது நிர்வாகத் திறனற்ற திமுக அரசு. தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் புறப்படும் என்று அறிவித்து விட்டு திடீரென்று முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கிளாம்பாக்கத்தில் பேருந்து என மக்களை அலைய வைக்கிறது அரசு. பொங்கல் முடிந்து தான் பொதுமக்களை ஊருக்கு அனுப்ப வேண்டும் என முதல்வரும் போக்குவரத்துத்துறை அமைச்சரும் முடிவெடுத்து வைத்ததை போல ஆமை வேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பேருந்து நிலையம் வந்தடைய மக்கள் நடக்க இயலாமலும் பல மணிநேரமாக காத்திருந்தும் பேருந்து கிடைக்காத அவலமும் ஏற்பட்டுள்ளது. முதல்வருக்கும் அவரது மகனுக்கும் சினிமா படம் பார்த்து ரிவ்யூ சொல்ல தான் நேரம் இருக்கு. மக்கள் படும் பாட்டை எல்லாம் எப்படி பார்ப்பார்கள்" என்று விமர்சித்துள்ளார்.
நிலைமை என்னவோ இப்படி தான் இருக்கு சென்னை மாநகரத்தில் இருந்து வெளியூருக்கு செல்வோர் விழுப்புரம் பேருந்து நிலையம் வருவதற்க்கே சுமார் ஆறு மணி நேரம் ஆவதாக கூறுகின்றனர். அரசு அறிவித்தபடி பேருந்து இயக்கப்படுகிறதா என்ற கேள்வி மக்கள் இடத்தில எழுந்துள்ளது.