24 special

ஒரே வீடியோ....! திட்டம் போட்டு முதல்வரை இமேஜை காலி செய்த பெரிய குடும்பம்....

mk stalin
mk stalin

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்! அதனால் உதயநிதி துணை முதல்வர் பதவி கொடுக்கப்படுகிறது! விரைவில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படும் என பல்வேறு விவாதங்கள், youtube சேனல்களில் அரசியல் விமர்சகர்களின் பேச்சுக்கள் அதிக அளவில் எழுந்து வந்தது. மேலும் விரைவில் முதல்வர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருக்கிறார் என்றெல்லாம் வேறு தகவல்களை கசிய விட்டனர் சில அரசியல் விமர்சகர்கள்.இந்த நிலையில் முதல்வர் சென்னையில் நடந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில் பேசும் பொழுது 'நான் நலமுடன் தான் இருக்கிறேன்! எனக்கு உடல்நிலை சரியில்லை என கூறுபவர்களை பார்த்தால் நகைச்சுவையாக இருக்கிறது. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி  என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள், அதற்கு உதயநிதியே பதில் கூறி இருக்கிறார் அமைச்சர்கள் அனைவரும் துணை முதல்வர்கள் தான்' எனக் கூறியிருக்கிறார் என்று பேசினார். 


உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி எல்லாம் கிடையாது நான் ஆரோக்கியமாக தான் இருக்கிறேன் என முதல்வர் கூறிய விவகாரத்தை வைத்து திமுகவினர் இணையத்தில் எங்கள் முதல்வர் ஆரோக்கியமாக இருக்கிறார், விமர்சனம் செய்தவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்துவிட்டார் என்றெல்லாம் கூறி வந்தனர். இந்த நிலையில் சன் டிவியில் அவர்கள் சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்னையில் பொங்கல் விழா கொண்டாடிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது, அதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பொங்கல் கொண்டாடி பின்னர் டிரம்ஸ் அடிப்பது போன்ற காட்சிகள் வீடியோவாக சன் டிவியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் எல்லாம் ஒளிபரப்பப்பட்டது. அந்த வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் சிரித்துக்கொண்டே, தன் இரு கைகளால் ட்ரெம்ஸ் அடித்துக்கொண்டு மக்களை பார்க்கிறார்.

இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இணையத்தில் பலர் இந்த காட்சிகளை டவுன்லோட் செய்து வைத்துக் கொண்டு முதல்வருக்கு என் கைகள் நடுங்குகிறது? முதல்வர் ஏன் இவ்வளவு நடுக்கமாக இருக்கிறார்? என்றெல்லாம் விமர்சனங்களை பதிவிட ஆரம்பித்து விட்டனர். தற்பொழுது இதுதான் இணையத்தில் வைரலாக உணவருகிறது முதல்வர் அவர்கள் ஆரோக்கிய குறைபாடாக இருக்கிறாரா? என்ன நடக்கிறது? என்றெல்லாம் வேறு இணையத்தில் கேள்விகள் எழதுவங்கிவிட்டன. அதிலும் குறிப்பாக ஒரு சிலர் சன் டிவி திமுகவை பழிவாங்க இது போல் செய்து விட்டதோ? ஏன் முதல்வர் வீடியோவை இப்படி ஒளிபரப்ப வேண்டும்? இது விமர்சனங்களுக்கு எல்லாம் விதை போட்டது போல் ஆகிவிட்டது என சன் டிவியையும் சேர்த்தே குறை சொல்லி வருகின்றனர். ஆனால் இதற்கு சன் டிவி தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் முதல்வர் நரம்பு தளர்ச்சி பிரச்சினையால் அவதிப்படுகிறார், அதற்காகத்தான் அவரது வீட்டு மாடியில் நீச்சல் குளம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அதில் அவர் நடந்து பயிற்சி எடுக்க வேண்டும் என்பது போன்ற சிகிச்சை தேவைப்படும், அதனால் தான் முதல்வர் வீட்டில் நீச்சல் குளம் கட்ட இருக்கிறது எனக் கூறியதும் அதற்கு அடுத்தபடியாக வரும் நிகழ்ச்சிகளில் முதல்வர் அதிக கை நடக்கத்துடன் இருப்பதையும் சேர்த்து தற்பொழுது அதிக அளவில் விமர்சனங்களை முன்வைக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். ஆனாலும் திமுக தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர் அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை முதல்வர் உடல்நிலை குறித்து என்பதும் குறிப்பிடத்தக்கது.