24 special

மாணவர்களின் நிலைப்பாட்டை மாற்றிய திமுக.... அரசை அடமானம் வைக்கும் நிலைமையா?

school, cm stalin
school, cm stalin

காமராஜர் ஆட்சிக் காலத்தில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தியது, இதன் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களை அதிகளவில் சேர்த்தால், மாணவர்களின் வருகையை அதிகரித்தல் போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள பள்ளிகளில் உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நாளடைவில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து அதிகரிக்க மதிய உணவில் முட்டை வழங்குதல் போன்ற திட்டத்தை அறிமுப்படுத்தினர். இப்போது ஆட்சியில் இருக்கும் திமுக, அறிமுகப்படுத்திய திட்டத்தை எல்லாம் தனியார் வசம் ஒப்படைக்க முடிவு எடுத்துள்ளதற்கு கண்டனம் வலுத்து வருகிறது.


தமிழநாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின் முதல் திட்டமாக பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் காலை உணவு திட்டத்தை வழங்க தமிழக அரசு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்ய மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் காலை உணவு வழங்க, 'அட்சய பாத்திரா' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், அந்நிறுவனம், உணவில் வெங்காயம், பூண்டு சேர்ப்பதில்லை என்ற காரணத்தைக் கூறியும், அரசிடம் உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கும்போது ஏன் வெளியில் ஒப்பந்தம் கொடுக்க வேண்டும் என்றும் கூறி, எதிர்க்கட்சியாக இருந்த திமுக அந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இப்படியே அரசு அறிவிக்கும் திட்டத்தை அரசு தனது கட்டுப்பாட்டில் இருந்து தனியார் வசம் கொடுத்தால் மாணவர்களுக்கு நல்ல உணவு கொடுக்கப்படுமா? அரசால் ஏற்று நடத்த முடியாதா திட்டத்தை எதற்காக பேருக்காக அறிவித்தது? கடந்த முறை அதிமுக ஆட்சியிலும் இதே நிலைமை ஏற்பட்டது, இப்போது இருக்கும் திமுக அரசும் இதே செயலை செய்வதால் மக்கள் எதற்காக உங்களை தேர்ந்தெடுத்தார்கள். அரசு விற்கும் டாஸ்மாக்கை தனியார் வசம் கொடுக்காமல் அரசே அதில் புதிய வகை ஏற்பாடு நடத்துகிறது இதுதான் மக்களுக்கான அரசு என்று சொல்வது வெட்க கேடாக இருப்பதாக என்ற கண்டனம் அரசுக்கு எதிராக வலுத்து வருகிறது.

முன்னதாக போக்குவரத்துக்கு துறையை தனியார் வசம் ஒப்படைக்க அரசு மும்முரம் காட்டியது, அதுவும் சென்னையில் ஆரம்பித்து அதனை அப்டியே தமிழகம் முழுவதும் கொண்டு செல்வதை கைவிட வேண்டும் என்று கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இப்போது காலை உணவு திட்டம் என்று அனைத்து துறையையும் அரசு தனியாரும் ஒப்படைக்க காரணம் என்ன? ஏழை மாணவர்களுக்கு வழங்கும் இத்திட்டத்தில் தனியார் எப்படி செயல்படும் என மக்களுக்கு நன்கு அறியும். எனவே அரசு தனியாரிடம் கொடுப்பதால் வரும் காலத்தில் மக்களையும் தனியாரிடம் கொடுத்து அரசு இயங்கும் நிலைக்கு கொண்டு செல்லாது என்பதற்கு என்ன உறுதி என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.