24 special

எப்படி இருந்த மனுஷன் தெரியுமா அவரு? அவருக்கா இப்படி ஆகணும்...?

viayakanth,premalatha vijayakanth
viayakanth,premalatha vijayakanth

திரைத்துறையில் மட்டுமல்லாமல் அரசியலிலும் கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்களுக்கு தற்பொழுது மியாட் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவருக்கு இன்னும் 14 நாட்கள் தீவிர சிகிச்சை தேவை என அறிக்கை வெளியிட்டுள்ளனர், இந்த நிலையில் அவருக்கு உடல் நலத்தில் பாதிப்பு கிடையாது கேப்டன் விரைவில் மீண்டும் வருவார் என அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார். 


ஆனால் கேப்டனுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது அவருக்கு என்ன நடக்கிறது எனக்கு விசாரித்த பொழுது கேப்டனுக்கு தற்பொழுது ட்ரக்கியாஷ்டமி சிகிச்சை ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது விஜயகாந்த் அவர்களுக்கு சுவாசப் பிரச்சினை இருந்து வருகிறது அவரால் மூச்சு கூட விட முடியவில்லை அதனால் தற்பொழுது செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவர் மூச்சு விட்டு வருகிறார், இப்படி அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும் காரணத்தினால் அவருக்கு ட்ரக்கியாஷ்டமி சிகிச்சை அளிப்பதற்காக டாக்டர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

ட்ரக்கியாஷ்டமி என்பது நுரையீரல் பிரச்சனையால் சுவாசிக்க இயலாதவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை ஆகும், இந்த சிகிச்சை என்பது தொண்டையில் அதுவும் தொண்டையின் அடிப்பகுதியில் குரல் நான் இருக்கும் இடத்தில் ஒரு துளையிடப்பட்டு அதன் வழியாக குழாய் மூலம் சுவாசம் ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இது மட்டுமல்லாமல் அவரது சுவாசக் குழாயில் உள்ள அடைப்புகள், அனைத்தும் நீக்கப்பட்டு அவரது நுரையீரல் இயங்குவதற்கு இந்த சிகிச்சை தான் தற்பொழுது பலன் அளிக்கும் என கூறப்படுகிறது. 

இப்படி இந்த சிகிச்சைக்காக தான் தற்பொழுது மருத்துவர்கள் ஆலோசித்து வருகிறார்கள், ஆனால் எப்படி பார்த்தாலும் அடுத்த 15 நாட்கள் கேப்டன் மிகவும் சிரமப்பட வேண்டியது தான் இருக்கும் எனவும் எப்படியும் அவரைக் காப்பாற்றி விடலாம் என மருத்துவர்கள் விஜயகாந்த் அவர்களின் குடும்பத்திற்கு நம்பிக்கை அளித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மருத்துவமனையை நோக்கி அதிக தொண்டர்கள் வர வேண்டாம் விஜயகாந்த் அவர்களை பார்ப்பதற்கு தற்பொழுது அனுமதிக்க இயலாது அவர் விரைவில் வந்து கோயம்பேட்டில் உள்ள திருமண மண்டபத்தில் அனைவரையும் சந்திப்பார் என கூறி விஜயகாந்த் குடும்பத்தார் ஒரு தகவல் கூறியுள்ளார்கள்.

அவரது மனைவி, மகன்கள் மற்றும் அவரது மச்சான் சுதீஷ் ஆகியோர் அவர் தொண்டர்களை ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர், ஆனாலும் எங்கள் கேப்டன் எப்போது வருவார் எனும் கண்ணீருடன் அவருக்காக அப்பாவி தொண்டர்கள் நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் விஜயகாந்த் அவர்களுக்கு ஏற்கனவே காலில் விரல்கள் அகற்றப்பட்டு அவரால் நிற்க கூட முடியாது என்பது இப்பொழுதைய நிலை, இப்படி நிற்க முடியாத நிலையிலும் அவர் தற்பொழுது சுவாசத்திற்காக சிகிச்சை எடுத்து வருவது மேலும் அவரது உடல் நிலையை பாதிப்படைய வைத்துள்ளது. 

தற்பொழுது அவருக்கு சுயநினைவு இருக்கிறது சிகிச்சையை உடல் ஏற்றுக்கொள்கிறது என மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது, சிகிச்சை ஏற்றுக்கொள்ளும் வரை எந்த சிகிச்சை வேண்டுமானாலும் அளிக்க முடியும் அதன் காரணமாகத்தான் அவர் மீண்டு வந்து விடுவார் எனக் கூறுகிறோம் எனக்கும் வேறு மருத்துவமனை தரப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த 15 நாட்களும் அவர் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில்தான் இருப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.