தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் வேட்பாளர்களை ஆதாரத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறன்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு நாளைக்கு இரண்டு தொகுதிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தினமும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களுடன் காணொளி மூலம் பேசி வருகிறாராம் அப்போது அமைச்சர்களுக்கு அதிரடியாக வார்னிங் போட்டுள்ளாராம் ஸ்டாலின்.
தேர்தல் தொடங்க இன்னும் 20க்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக தலைவர்கள் நேரடியாக வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக சார்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தினமும் கூட்டணி கட்சி வேட்பாளர் மற்றும் திமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த பிரச்சாரத்திற்க்கு நடுவே நேரம் கிடைக்கும் போதே காணொளி மூலம் மாவட்ட செயலாளர்களுடன் மக்கள் ஆதரவு எப்படி இருக்கின்றது என்பது குறித்து கேட்டு வருகிறாராம்.
இதில், திமுக வேட்பாளர்களை தாண்டி கூட்டணியில் இருக்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கி வேலை செய்து வெற்றி பெற வைக்கவேண்டும் என்றும் ரிசல்ட் தோல்வியில் முடிந்தால் அவர்களது மாவட்ட செயலாளர்கள் பதவி பறிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன் காரணமாகவே திமுகவினர் தற்போது அனைத்து வேட்பாளர்களுக்கும் இறங்கி வெளி செய்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. திமுக செய்யும் பிரச்சாரத்தில் மக்கள் அதிருப்தியே அடைந்துள்ளதாகவும் குறிப்பாக பெண்களுக்கான மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் வரவேற்பு கிடைக்கும் என்று நினைத்த நிலையில் அது அப்படியே தலைகீழாக பிரதிபலிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் லோக்சபா தேர்தல் பணிகளுக்கு இடையில் திமுக நிர்வாகிகள் சிலருக்கும் அமைச்சர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து உள்ளாராம். அதாவது, தேர்தல் நெருங்கி வருகிறது, மிக கவனமாக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட அமைச்சர்களின் பெயரை கூறி பாதுகாப்பாக இருங்கள் எந் நேரத்தில் வேண்டுமானாலும் ரெய்டு வரலாம் என எச்சரிக்கை கொடுத்துள்ளாராம். உங்களைத்தான் அதிகம் குறி வைப்பார்கள். பார்த்து இருந்து கொள்ளுங்கள். கட்சிக்கு நிதி கொடுக்க தயாராகி இருப்பவர்களை இவர்கள் தூக்க பார்ப்பார்கள். அதற்கு விட்டுவிடாதீர்கள்.
எனக்கு இது தொடர்பாக இரவில் அடிக்கடி முக்கிய தகவல்கள் வருகின்றன. எப்போது வேண்டுமானாலும் ரெய்டை எதிர்பாருங்கள். சில அதிகாரிகள் அரசுக்கு எதிராக மேலே தகவல் அனுப்புகிறார்கள். நமக்கு எதிராக காய் நகர்த்துகிறார். மாநில அதிகாரத்தில் இருக்கும் சிலரே கருப்பு ஆடுகள் போல செயல்படுகிறார்கள். தேர்தல் நேரம் என்பதால் சில அதிகாரிகளை நாம் அடக்க முடியாது. எனவே பாதுகாப்பாக இருங்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளாராம்.
ஏற்கனவே, கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதி மட்டும் திமுக சார்பாக நின்ற கதிர் ஆனந்த் சொந்தமான இடங்களில் ரெய்டுகள் நடந்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதனால் தான் தற்போது மீண்டும் வந்துவிடுமோ என்று பயத்தில் எச்சரிக்கை விடுத்தது வருகிராம் ஸ்டாலின். மேலும், தற்போது அமைச்சர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது இதனால் அது தொடர்பாக ரெய்டுகள் வரலாம் என்று கூறப்படுகிறது.