தமிழ் சினிமா நட்சத்திரத்தில் மிகவும் முக்கியமான நபர் நடிகர் டேனியல் பாலாஜி அவரது திடீர் இறப்பு என்பது அனைவருக்கும் வருத்தமே, டேனியல் பாலாஜி சினிமாவுக்கு வரும் ஆசையில் முறையாக படிப்பை முடித்துவிட்டு சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர். அவர் ஆரம்பத்தில் கோலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காமல் சீரியலில் கவனம் செலுத்தினார் அங்கு நடிப்பு திறமையை வளர்த்து கொண்டு கோலிவுட் பக்கம் திரும்பினார். இவர் விஜயதன் பைரவா படத்தில் நடித்திருந்தார் அப்போது விஜய் சிட்ரிக்ட்டாக கண்டிஷன் போட அதனை டேனியல் பாலாஜி மறுத்துவிட்டதாக சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் உள்ள வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னனி வில்லன் நடிகர்களில் ஒருவர் டேனியல் பாலாஜி. சினிமாவில் தனக்கான ஒரு பிராண்டை பதித்தவர். சினிமாவில் ஆர்வம் கொண்ட இவருக்கு சீரியலில் வாய்ப்பு கிடைத்தது அதன் பிறகு கோலிவூட்டில் கால் பதித்த பாலாஜி கமல், சூர்யா உள்ளிட்ட முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்து வந்தார். முதல் படமான , வேட்டையாடு விளையாடு படத்தில் தனது நடிப்பு திறனை செதுக்கியிருப்பார் அந்த கேரக்டெர் அணைத்து ரசிகர்கள் மத்தியிலும் இடம்பிடித்திருக்கும். அதில் வரும் அமுதன் கேரக்டெர் தேரிக்காவிடிருப்பார். அதன் படத்தின் ஷூட்டிங் வெளிநாடுகளில் நடந்த போது பிணத்துக்கு மேக்கப் போட அங்குள்ள நிறுவனங்கள் 50 ஆயிரம் டாலர் வரை வேண்டும் எனக் கேட்டார்களாம். ஆனால் டேனியல் பாலாஜி எனக்கு 100 டாலர் தாங்க எனக் கேட்டாராம். கௌதம் மேனனுக்கு என்னவென்று புரியாமல் அவர் கேட்டதுக்காக கொடுத்தாராம்.
டேனியல் பாலாஜிக்கு ‘டேனியல்’ என்ற பெயர் வந்ததற்கு காரணம், அவர் ‘சித்தி’ தொடரில் நடித்த அந்த கதாப்பாத்திரம்தான். கவுதம் மேனன் உடன் நெருங்கிய வட்டாரத்தில் இருந்த டேனியல் பாலாஜி சூர்யாவுடன் காக்க காக்க படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு அவரது புகழ் உச்சத்திற்கு சென்றது. இதையடுத்து, தனுஷ் உடன் பொல்லாதவன் படத்திலும் வட சென்னை படத்திலும் நடித்தார். இன்றும் டேனியல் பாலாஜியின் டெம்பிளேட் இணையத்தில் வைரலாகி வரும் அதில், ‘லைஃப்ப தொலைச்சிட்டீயேடா’ என்ற வசனம் மீம்ஸ் வைரலாகும். இதனால், இயக்குநர் வெற்றிமாறனுக்கு நெருக்கமான நபர்களுள், ஒருவராகவும் மாறினார்.
இப்படி சினிமாவால் வளர்ந்து வரும் நடிகராக இருந்த டேனியல் பாலாஜி, விஜயுடன் பைரவா படத்தில் நடித்த டேனியல் பாலாஜியை டைரக்டர் பரதன் அவரை மொட்டை அடிக்க வேண்டும் என்றாராம். ஆனால் விஜய் அவர் எவ்வளோ பெரிய நடிகர். அவரிடம் போய் அப்படி கேட்கிறீர்களே? அதெல்லாம் வேண்டாம் என்றாராம். ஆனால் அடுத்த நாளே மொட்டையுடன் வந்து நின்று அதிர்ச்சி கொடுத்தாராம்.எதற்கு இப்படி பண்ணீங்க என்று கேட்டதற்கு இந்த படம் தான் எனக்கு முக்கியம் அடுத்த படம் பிறகு பார்த்துக்கலாம் என்று கடந்து சென்றாரம்.இப்படி சினிமாவில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்ட அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.