உணவுகளில் ஏற்படும் மாற்றங்கள் நல்லவையா?? கெட்டவையா??இன்றைய உலகில் உணவு என்பது பல வகையான வளர்ச்சியை அடைந்து கொண்டே வருகிறது. இன்று வெளியில் வாங்கி நாம் உண்ணும் உணவுகள் மீண்டும் மீண்டும் நம்மை வாங்கி சாப்பிட வைக்கும் அளவிற்கு உள்ளது. ருசியாக இருக்கிறது என்று கடைகளில் வாங்கி உண்ணும் உணவுகள் உண்மையில் ஆரோக்கியமானதுதான??? ஆனால் அதில் சில உணவுகள் அதிகமாக உண்ணும் பொழுது நம் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் விஷமாகவே மாறிவிடுகிறது. இன்று சில குழந்தைகளும் ஆரோக்கியமானதை சாப்பிடாமல் அவை அதிக ருசியுடன் இருக்க வேண்டும் என்றே நினைக்கின்றார்கள்.இன்னும் சிலர் சாப்பாடை சாப்பிடுவது என்பது ஒரு பெரிய வேலையாகவே பார்க்கின்றார்கள். நாம் தினமும் அன்றாட எடுத்துக்கொள்ளும் உணவுகளே நம் உறுப்புகளுக்கு சென்று நம்மை மிகவும் ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது.
எனவே அவற்றிற்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை நாம் தான் சரியாக தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இன்று உள்ள இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். மேலும் இது போன்ற உணவுகளில் அதிக அளவு சீஸ் போன்ற பொருள்களும் மேலும் ருசிக்காக அஜினா மோட்டோ போன்ற பவுடர்களும் சேர்க்கின்றனர். இது அதிக அளவில் மனித உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பொருட்களாகும். மேலும் சாதாரணமாக உண்ணும் உணவுகள் கூட தற்போது புதிய புதிய வடிவில் உருவெடுத்துக் கொண்டு வருகிறது. எடுத்துக்காட்டாக தோசையை ஊற்றி அதில் சீஸ், கலர் பொடி போன்றவை கலந்து ஊற்றி அதனை வித்தியாச வித்தியாசமாக செய்து சாப்பிடுகின்றனர். இவ்வாறு சாதாரணமாக சாப்பிடும் உணவில் கூட மாற்றங்கள் செய்து ருசிக்காக ஏதேதோ சேர்த்து சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள பாதி உறுப்புக்கள் பயனற்று போய் அவர்களின் உடல் ஆரோக்கியம் மொத்தமும் அழிந்து, விரைவில் பல வகையான நோய்களுக்கு பாதிக்கப்படுகிறார்கள்.
இதுபோல தற்போது இன்னொரு ஒரு உணவையும் ஒரு வண்டிக் கடையில் தயாரிக்கின்றார்கள் அதையும் மக்கள் விரும்பி வாங்கி உண்கின்றார்கள். அது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு இட்லியினை இரண்டாக வெட்டி அதை தோசை கல்லில் போட்டு அதன் மீது நெய் ஊற்றி வெள்ளை நிறத்தில் சட்டினி ஒன்றினை ஊற்றுகின்றனர், அதன்பின் தக்காளி சட்னியை ஊற்றுகின்றனர், மேலும் பல வகையான மசாலாக்கள் சேர்த்து, பிளாக் சீட் என்று அழைக்கப்படும் கருத்தியல் போன்ற ஒன்றை செய்கின்றனர், அதன் பின் மேலும் கொஞ்சம் மசாலாக்களை சேர்த்து பர்கரில் ஊற்றும் சாஸ் போன்ற ஒன்றை சேர்க்கின்றனர். அதன்பின் வெள்ளை நிறத்தில் ஸ்பெஷல் சாஸ் என்ற ஒன்றை செய்கின்றனர். மேலும் டொமேட்டோ சாஸ் போன்றவற்றை சேர்த்து அதனை கலந்து விடுகின்றனர். அந்த கலவையின் மீது வெங்காயத்தினை தூவி விடுகின்றனர். மேலும் தக்காளி, குடைமிளகாய், கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்களை அதன் மீது தூவி விடுகின்றனர்.
இந்த காய்கறிகள் எல்லாம் சேர்ப்பதினால் இவை பார்ப்பதற்கு மிகவும் சத்தான உணவாக அனைவருக்கும் தோன்றும். சேர்க்கப்படும் சாஸ் போன்றவை மனிதர்கள் தொடர்ந்து சாப்பிடக்கூடிய உணவுகள் அல்ல!! மேலும் இவர்கள் காய்கறிகளை தூவி விட்டு அதன் மீது அதிகப்படியான சீஸ் சேர்த்து விடுகின்றனர். மேலும் ஏதோ மசாலா கலவையை அதன் மீது வைத்து அதன் பின் மேலும் கொஞ்சம் சீஸ் சேர்த்து அந்த இரண்டு துண்டு இட்லிகளையும் ஒன்றாக இணைத்து அதனை சாப்பிடுவதற்கு அழைக்கின்றனர். இதை பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் நல்ல நிறத்துடனும் இருப்பதால் வாங்குபவர்கள் அதனை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அதிக அளவில் சேர்த்தால் அதை பல நோய்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்றும் பலர் கூறுகின்றனர்!!அதோடு சாதாரணமாக ஒரு இட்லியில் சாம்பார் மற்றும் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டாலே மிக ருசியாக இருக்கும் ஆனால் இப்படி ஒரு இட்லி புது வடிவத்தை பெற்றிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது!