24 special

இந்து மக்கள் கட்சியுடன் திமுக கைகோர்ப்பு..? அதிருப்தியில் திமுக தலைமை!

Udhayanidhi, Anbalagan
Udhayanidhi, Anbalagan

கடந்த ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடத்தப்பட்டது. இதில் தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது, இந்துக்கள் மத்தியில் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையிலும் உள்ளது. இது இந்திய அளவில் திமுக கட்சி மீதும் உதயநிதி மீதும் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் திமுக எம்எல்ஏ பொங்கல் விழாவில் கலந்து கொண்டதால் திமுக தலைமை மொத்தமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


திமுகவை கடுமையாக எதிர்த்து வரும் இந்து மக்கள் கட்சியினருடன்  திமுக எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன் கைகோர்த்துள்ளாரா அல்லது திமுக கைகோர்த்துள்ளதா என்ற கேள்வி திமுக கட்சி வட்டாரத்திலேயே எழுந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதில் திமுக எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன் பங்கேற்றுள்ளதால் திமுக தலைமை மிக வெறுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. 

சனாதன கொள்கைக்கு ஆதரவாகவும், திராவிட கொள்கைக்கு ஏதிராகவும் நடைபெற்ற இந்த விழாவில் திமுகவை சேர்ந்த எம்எல்ஏ பங்கேற்றதால் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழாவில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் சனாதனத்தை போற்றும் மாபெரும் பொங்கல் விழா என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதத்திற்கு முன்னதாக உதயநிதி, சேகர்பாபு மட்டும் ஆ.ராசா உள்ளிட்டவர்கள் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டது தொடர்பாக அர்ஜுன் சம்பத் விமர்சித்து வரும் வேலையில் அவரது கட்சி விடுத்த அழைப்பை ஏற்று அறிவாலயத்துக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சாக்கோட்டை அன்பழகன்.

சாக்கோட்டை அன்பழகனை பொறுத்தவரை தஞ்சை மாவட்ட திமுகவில் மிகவும் சீனியர் நிர்வாகியாக இருக்கக் கூடியவர். அவருக்கு தெரியாத அரசியல் அல்ல. ஆனால் அப்படியிருந்தும் அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி விடுத்த அழைப்பை ஏற்று அவர் சனாதன பொங்கல் விழாவில் கலந்து கொண்டிருக்கிறார் என்றால் அதற்கு ஏதேனும் உள் காரணங்கள் இருக்கக் கூடுமோ எனப் பேசப்படுகிறது. சனாதன கொள்கைக்கு எதிராக திக, திமுக, விசிக மட்டும் திமுகவுடனான கூட்டணி கட்சிகள் அரசியல் செய்து வரும் இந்த நிலையில் எம்எல்ஏ ஒருவர் பொங்கல் விழாவில் கலந்துகொண்டது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவர் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி நடத்தும் 'சனாதன' பொங்கல் விழாவில், திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் பங்கேற்பு! 'சனாதன ஒழிப்புப் போராளி' உதயநிதிக்கு இது தெரியுமா? என கேள்வி முன்வைத்துள்ளார். தற்போது இச்சம்பவம் அரசியல் வற்றதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.