24 special

பாஜக அசுர சக்தி ஆகிவிட்டது கதறும் அதிமுகவினர்

edapadi, annamalai
edapadi, annamalai

 தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்கப்பட்டதிலிருந்து பாஜகவின் நிலையானது தமிழகத்தில் நன்கு காலூன்றியதோடு பாஜகவின் செல்வாக்கும் தற்போது உயர்ந்துள்ளது. ஏனென்றால் அண்ணாமலை பத்திரிகையாளர்கள் தரப்பில் முன்வைக்கும் கருத்துக்களும் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கு பின்னால் ஆயிரம் அர்த்தங்களும் ஆதாரங்களும் இருக்கிறது. அனைத்துமே இன்றைய இளைய தலைமுறையினர் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஏனென்றால் முன்பெல்லாம் பெரும்பாலான இளைய தலைமுறை அரசியல் பக்கமே திரும்ப மாட்டார்கள்! ஆனால் தற்பொழுது அரசியல் மீதும் கவனம் செலுத்தி ஓட்டு அளித்து வருகின்றனர். அதன்படி தற்பொழுது புதிதாக உருவெடுத்துவரும் அண்ணாமலையை மீது இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு ஈர்ப்பு மற்றும் பற்றி ஏற்பட்டு அண்ணாமலை பக்கம் திரும்பி வருகின்றனர் ஏன் அண்ணாமலை பக்கம் திரும்புகிறார்கள்!  எதற்காக உங்களுக்கு அண்ணாமலையை பிடிக்கிறது என்று கேள்விகள் முன்வைக்கப்படும் பொழுதும் எது பேசினாலும் கரெக்டா பேசுறாரு ஆதாரம் இருக்கு அவர்கிட்ட! படிச்ச ஒரு இளைஞன், இவ்வளவு நாள் பார்த்த அரசியல்வாதியை விட இவர் மிகவும் தனித்துவமானவராக இருக்கிறார் என்ற பல காரணங்களை பல இளைஞர்கள் முன்வைத்து வருகின்றனர். 


மேலும் அண்ணாமலை தற்போது மேற்கொண்டு வரும் என் மண் என் மக்கள் நடை பயணமும் மக்கள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் ஜூலையில் ராமநாதபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த நடைபயணம்  கன்னியாகுமரி தூத்துக்குடி விருதுநகர் நாகர்கோவில் நாகப்பட்டினம் மதுரை தேனி திண்டுக்கல் என ஆரம்பித்து கோயம்புத்தூர் நீலகிரி வேலூர் என சென்று நாகப்பட்டினம் கடலூர் திருச்சி பெரம்பலூர் அரியலூர், சேலம் என இதுவரை தமிழகத்தில் 152 தொகுதிகளை யாத்திரை நிறைவுசெய்துள்ளது.. இப்படி தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து வரும் அண்ணாமலையை பார்ப்பதற்காக ஒவ்வொரு பகுதி மக்களும் ஆரவாரத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை பெரும் கட்சியாக இருக்கும் திமுக மற்றும் அதிமுக இது போன்ற ஒரு நடை பயணத்தை மேற்கொண்டு இருந்தால் கூட இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்திருக்குமா என்பது யோசிக்க வைக்கிறது என அரசியல் விமர்சனங்கள் கூறும் வகையில் அண்ணாமலை மேற்கொண்டுள்ள நடைபயணம் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில்,. அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார் அந்த பேட்டியில், பிஜேபியின் வாக்கு சதவிகிதம் தமிழ்நாட்டில் வளர்ந்திருக்கிறதா என்று கேள்வி முன் வைக்கப்பட்ட பொழுது வளர்ந்திருக்கிறது அதுவும் குறிப்பாக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகும் அவர் மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் நடை பயணத்தாலும் செல்வாக்கு நன்கு வளர்ந்திருக்கிறது என்றும்  இளைஞர்கள் மற்றும் தாய்மார்கள் அண்ணாமலை நோக்கி திரும்பி உள்ளனர் என்று கூறினார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அண்ணாமலை சொல்வதை  தான் டெல்லி தலைமை கேட்கும் என்றும் தமிழகத்தில் பாஜக ஒரு சக்தியாக வளர்ந்து விட்டது என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இதனால் வரை பாஜகவின் வளர்ச்சியை பார்த்து திமுக தான் பயந்து வந்தது ஆனால் தற்போது அதிமுகவும் பயப்படும் சூழல் உருவாக்கிவிட்டது என விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் எடப்பாடி குழுவினர் வேறு எடப்பாடி பழனிசாமியிடம் நாம் இன்னும் வேகமாக வேலை செய்ய வேண்டும், இளைய தலைமுறையினர் அண்ணாமலையை பார்த்து பாஜக பக்கம் செல்கின்றனர், நாமும் அதுபோல எதாவது செய்தாகவேண்டும் என கூறியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.