Cinema

அயலான் வேண்டாம்..! கேப்டன் மில்லர் ஓகே சொன்ன உதயநிதி..?

Udhayanidhi stlin, Sivakarthikeyan, Dhanush
Udhayanidhi stlin, Sivakarthikeyan, Dhanush

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியான கேப்டன் மில்லர், அயலான், மிஷன் பார்ட் 1, மெரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட வளர்ந்து வரும் நடிகர்களின் படம் வெளியானது. இந்த படங்கள் அனைத்தும் கலவையான விமர்சனம் பெற்று வருகிறது. இந்நிலையில் சிவகாத்திகேயன் படம் குறித்து எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் தனுஷ் குறித்து ட்வீட் செய்துள்ளது ரசிகர்களிடையே கோவத்தை உண்டாகியுள்ளது.


தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படம் முதல் பாதி சுமாராக போனாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்வதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த படத்தில் 600 வருடங்களாக கோயிலுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை உள்ளே விடவில்லை என படத்தில் வசனம் வரும். வெள்ளைக்காரனிடம் இருந்து சுதந்திரத்தை வாங்கி இந்த மகராஜாக்களுக்கத்தானே கொடுக்கப் போற என சிவ ராஜ்குமாரை பார்த்து தனுஷ் கேட்கும் வசனங்களும் படத்தின் ஆழத்தை உணர்த்தும். இதுவும் அசுரன் படத்தை போன்று உள்ளதாக பலரும் படத்தை குறை சொல்லி வருகின்றனர்.

4 வருடங்களுக்கு முன்பு தயாரான படம் அயலான் இது நேற்று முன்தினம் வரை வெளியாகாது என்று தகவல் வந்தது. பல போராட்டங்களை கடந்து நேற்று படம் வெளியானது. சிவகார்த்திகேயன் படத்தை கழட்டி விட்டு தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை உதயநிதி ஸ்டாலின் பாராட்டி உள்ளார். ”ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், திரு. சிவராஜ்குமார், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இசை அமைப்பாளர் சகோதரர் ஜி.வி. பிரகாஷ் குமார், சத்ய ஜோதி நிறுவனம், பிரியங்கா மோகன், சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்புராயன், உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தை விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்.” என உதயநிதி ஸ்டாலின் பாராட்டி உள்ளார். சிவகார்த்திகேயன் முதன் முறையாக தமிழ் சினிமாவில ஏலியனை மையப்படுத்தி எடுத்து குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் தனுஷை எதற்காக புகழ் பாடுகிறார் உதயநிதி ஸ்டாலின் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றார். தனுஷ் அரைத்த மாவை திரும்ப திரும்ப அரைக்கிறார் என்றும் ரசிகர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

அயலான் தமிழ் சினிமாவில் புது முயற்சி என்றும் குழந்தைகளுக்கு ஏற்றது போல் உள்ளதாகவும் படத்தில் எந் இடத்திலும் கிராபிக்ஸ் காட்சிகள் பிசிறு தட்டாமல் அற்புதமாக உள்ளது என்று பல விமர்சனம் வருகிறது. ஆனால், உதயநிதி எதற்காக தனுசுக்கு போர்கொடி தூக்கினார் என்ற கேள்வி எழுந்தது. சென்னை மக்களுக்காக சிவகார்த்திகேயன் 10 லட்சம் நிவாரண தொகையை உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.