24 special

பிரேமலதா மீது பழி சுமத்திய திமுக அமைச்சர்..!

Premalatha, sivasankar
Premalatha, sivasankar

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் உடல் நல காரணத்தால் உயிரிழந்தார். இதற்கு தமிழக அரசு சார்பில் இறுதிச்சடங்கு மற்றும் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது திமுகவால் தான் கேப்டன் விஜயகாந்துக்கு இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டதாக தேமுதிக தொண்டர்கள் விமர்சித்து வந்தனர். மறுபக்கம் அரசு நல்ல மரியாதை கொடுத்ததாக பேச்சும் அடிபட்டது. தற்போது தேமுதிக பொருளாளர் பிரேமலதாவை கண்டித்து போக்குவரத்துக்கு துறை அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார்.


நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி குறித்து தமிழக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது. அதிமுக பாஜவுடனான கூட்டணியில் இல்லை என்ற கோட்பாடுடன் செயல்பட்டு வருகிறது. இதில் திமுக கட்சிகள் இப்போ இருக்கக்கூடிய கட்சிகள் போதும் 40ம் நமதே என்று சொல்லி வருகிறது. ஆனால், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்த உடன் திமுக செய்தது எல்லாம் அரசியலில் லாபத்திற்காக என்ற பேச்சு எழுந்தது. ஆனால், விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததில் இருந்து திமுகவுடன் மட்டும் கூட்டணி ஏற்படுத்திக்கொள்ளவில்லை.

இந்த நிலையில், ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் செய்த மக்கள் நலப் பணிகளை மறைக்கும் முயற்சியில் திமுகவினரும், அங்குள்ள அரசு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி 4 நாட்களுக்கு முன்னர் கண்டன அறிக்கை விடுத்திருந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, வரும் 20ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட தேமுதிக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தார்.  உண்மையை சொன்னதும் திமுகவில் இருக்கக்கூடிய அமைச்சர் சிவசங்கர் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜயகாந்துக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனால் திமுக மீது தேமுதிக தொண்டர்கள் மிகவும் மரியாதையை வைத்துள்ளனர். அதனை திசை திருப்பவே பிரேமலதா இப்படி செய்வதாகவும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தீர்த்தத்தில் தேமுதிக ஒரு நிலைப்பாடு எடுத்துவிட்டது, எனக் கருதுவதாகவும் அந்த முடிவுக்கு தேமுதிக தொண்டர்களும், விஜயகாந்த் ரசிகர்களும் இடைஞ்சல் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக் இப்போதே திமுகவை கண்டித்து இப்படியொரு அரசியல் நிலைப்பாடு எடுத்திருக்கிறார் எனவும் அமைச்சர் சிவசங்கர் கூறினார். இந்த காணொளி வைரலாக அமைச்சர் சிவசங்கருக்கு தேமுதிக தொண்டர்களே கண்டனம் தெரிவதி வருகின்றனர். வீணாக தலையை கொடுத்து மாட்டியது போல ஆகிவிட்டது. திமுகவால் விஜயகாந்துக்கு வந்தது கொஞ்சம் நஞ்சம் இல்லை என்றும் விமர்சிக்க தொடங்கிள்ளனர்.