24 special

செம்ம விளையாட்டை விளையாடிய அமலாக்கத்துறை...! தகவல்களை கசிய விட்ட சவுக்கு....!

senthilbalaji
senthilbalaji

தமிழகத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு அமைச்சர் இந்த அளவிற்கு அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை வசம் சிக்கி உடல் நிலையும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஜாமீனுக்காக மனுக்களை முன்வைத்தும் ஜாமின் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி ஆகப்பட்டு இன்றளவும் புழல் சிறையில் இருக்கிறார் என்றால் அது திமுக அமைச்சரயை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி மட்டுமே! 


ஏனென்றால் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி திமுக ஆட்சி அமைத்த பிறகு திமுகவில் இணைந்தது மட்டும் இன்றி மின்சாரம் மற்றும்  மதுவிலக்கு ஆயதீர்வை துறை அமைச்சராக பொறுப்பேற்கப்பட்டார். அந்த பொறுப்பிலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான தொடர்ச்சியாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்து அமலாக்கத்துறையின் சோதனை செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இறங்கியது. இதனை அடுத்து செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் ஊழல் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால் அவை குறித்து விசாரணை செய்வதற்காக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ய முற்படும்பொழுது நெஞ்சு வலியால் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார். அதற்குப் பிறகு செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இருப்பினும் செந்தில் பாலாஜி தரப்பு அவரது ஜாமீன் மனுவை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே வந்தது இருப்பினும் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வந்ததால் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு மூளையில் சில பிரச்சனைகள் இருப்பதாகவும் பிரைன் ஸ்ட்ரோக் வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் செந்தில் பாலாஜியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முன்வைத்து ஜாமினிற்காக கோரிக்கையை வலியுறுத்திய போதிலும் செந்தில் பாலாஜி வெளியில் சென்றால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதாக அமலாக்கத்துறை தனது தரப்பு வாதத்தை முன் வைத்தது. 

இதனால் செந்தில்பாலாஜிக்கு இதுவரை ஜாமீன் கிடைக்காமல் இருந்து வருகிறது.  அதன்படி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மனு தற்பொழுது மூன்று முறைகள் தள்ளுபடி ஆகி வந்து உள்ள நிலையில் நான்காவது முறையும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது தம்பி அசோக்குமார் இதுவரை அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகாமல் தலைமுறைவாக இருந்து வருவதால் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை பரிசிளிக்க முடியாது என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் கரூரில் தான் வலம் வருகிறார் என்றும் அவரை அமலாக்கத்துறை வேண்டுமென்றே தான் பிடிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறினார், மேலும்  அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் சகோதரரை கைது செய்தால் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் தரவேண்டிய நிலை ஏற்படும் ஆனால் அப்படி நடக்க கூடாது இதற்காக தான் செந்தில் பாலாஜி சகோதரரை கைது செய்யாமல் அமலாக்கத்துறை விட்டு வைத்துள்ளதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் அதோடு செந்தில் பாலாஜியின் சகோதரரை பிடிக்க வேண்டும் என்று நினைத்தால் அமலாக்கத்துறை என்றோ பிடித்திருக்கும்! ஆனால் செந்தில் பாலாஜியை வெளியில் விடக்கூடாது என்று ஒரே நோக்கத்திற்காகவே இந்நாள் வரை அசோக் குமாரை விட்டு வைத்துள்ளதாகவும் தெரிவித்து தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. 

செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமார் கரூரில் வலம் வந்தாலும் அமலாக்கத்துறை பிடிக்காமல் இருக்க செந்தில்பாலாஜி ஜாமீன் மட்டுமல்ல அசோக்குமார் வைத்திருக்கும் மேலும் சில தொடர்புகளை கண்காணிகத்தான் எனவும் வேறு கூறியது கரூர் கும்பலுக்கு மேலும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.