2021 இல் திமுக ஆட்சி அமைத்ததற்கு முக்கிய காரணமாக தேர்தலுக்கு முன்பாக திமுக செய்த பிரச்சாரங்களும் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து இணையதள வாசிகளையும் தன் பக்கம் கவர்ந்தது என்றும் கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி மக்கள் மத்தியில் அதிக நேர்முகப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்! அதுமட்டுமின்றி திமுகவின் வியூக அமைப்பாளராக செயல்பட்டவர் பிரசாந்த் கிஷோர்! இவர் பிரபல தேர்தல் வியூக அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார் அதன்படியே 2021 தேர்தலில் திமுக தன் சார்பாக பிரசாந்த் கிஷோரை வேலை பார்க்க செய்து அவரது வியூக அமைப்பாலே தமிழகத்தில் ஆட்சியை அமைத்தது.
இதேபோன்று 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் திமுகவிற்கு சார்பாக வியூகம் அமைக்க பிரசாந்த் கிஷோரை திமுக தலைமை அழைத்த பொழுதும் பிரசாந்த் கிஷோர் அதற்கு எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல் தாமதப்படுத்தியே வந்துள்ளார்.
இந்த நிலையில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வந்த திமுக 2024 கண்டிப்பாக நமது சார்பாக அதிக எம் பிகளை கொண்டு வர வேண்டும் அதற்காக பிரசாந்த் கிஷோரை விரைவில் வர வைக்க வேண்டும் என்று அறிவாலய தலைமை தரப்பில் அழைப்பு விடப்பட்டதாகவும் அதற்கு பிரசாந்த் கிஷோர் மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏனென்றால் பாஜக தற்பொழுது அசுர வேகத்தை கண்டுள்ளது மேலும் பிரதமர் நரேந்திர மோடி கொண்டுள்ள மூன்று முக்கிய அம்சங்களை வேறு எந்த அரசியல் தலைவரும் பெறவில்லை என்றும் ஒருவேளை பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் அந்த மூன்று தகுதிகளையும் எதிர்க்கட்சி அல்லது வேறு கட்சியினர் முறியடிக்க வேண்டும் என்றும் சமீபத்தில் நேர்காணலில் ஒன்றில் கலந்து கொண்ட பிரசாந்த் கிஷோர் கூறிய வீடியோவும் அறிவாலய தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
எப்படி 2021ல் திமுகவிற்கு பிரசாந்த் கிஷோர் அமைப்பாளராக செயல்பட்டாரோ அதேபோன்று காங்கிரசுக்கு கடந்த கர்நாடக தேர்தல் மற்றும் பாரத் ஜடோ யாத்திரை போன்றவற்றில் சுனில் கனுக்கோலு வியூக அமைப்பாளராக செயல்பட்டு கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி அடைவதற்கு செயல்பட்டார். இந்த நிலையில் காங்கிரஸ் வியூக அமைப்பிலிருந்து சுனில் கனுக்கோலு விலகி இருக்கிறார் என பாஜகவின் மூத்த நிர்வாகி எஸ் ஆர் சேகர் கூறியுள்ளார்.
இதுகுறித்து எஸ்ஆர் சேகர், தனது எக்ஸ் வலைதளத்தில் காங்கிரசின் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுக்கோலு விலகல்...பட்ட இடத்திலேயே படும் கெட்ட குடியே கெடும் என்பது இதுதான் ஆமாம் சுனில் கனுக்கோலு வளர்ந்து வரும் செபாலஜிஸ்ட் இவர் வெற்றி மேல் வெற்றி பெற வேண்டும் தொழில் ரீதியாக என விரும்புகிறார். தோற்க போகும் கட்சியை தலையில் சுமந்து தானும் பள்ளத்தில் சகதியில் விழுந்து அமிழ்ந்து போக இவர் தயாராக இல்லை எவ்வளவு ரத்தம் ஏற்றினாலும் எவ்வளவு ஆக்சிஜன் கொடுத்தாலும் நிச்சயமாக எழுந்திருக்காது என தெரிந்த காங்கிரசுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணிபுரிய இவருக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? என பதிவிட்டுள்ளார். இப்படி,
தோக்கப்போகும் கட்சி காங்கிரஸ் இனி அதை தேறாது என சுனில் கனுகோலு விலகி இருப்பது திமுகவிற்கு மேலும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி காங்கிரஸ் அவ்வளவு தான்! காப்பாற்ற முடியாது என அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் INDI கூட்டணியை இனி காப்பாற்ற முடியாது எனவும் வேறு அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.