திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பல இடங்களில் திமுகவினரே போட்டி வேட்பாளராக களமிறங்கி கூட்டணி கட்சிகளை தோல்வியடைய செய்து வருகின்றனர் அந்த வகையில் நெல்லிக்குப்பம் நகராட்சியில் மிக பெருத்த அவமானத்தை விசிக சந்தித்துள்ளது.
நெல்லி குப்பம் நகராட்சி சேர்மன் பொறுப்பை விசிகவிற்கு ஒதுக்கி திமுக தலைமை உத்தரவிட்டது, நெல்லி குப்பத்தில் கடந்த பல தேர்தல்களாகவே ஆதிதிராவிடர் இனத்தினருக்கே தலைவர் பதவி இடம் ஒதுக்கப்பட்டது.
தற்போதைய தேர்தலில் பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது. எனவே, திமுக பிரமுகர் தலைவர் பதவியை எதிர்பார்த்து கூட்டணி கட்சியினருக்கும் சேர்த்து தேர்தல் செலவு செய்திருந்தார்.
தற்போது விசிகவிற்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் 20 பேர் புதன்கிழமை மாலையில் மொத்தமாக யாரும் தொடர்பு கொள்ள இயலாத இடத்திற்கு சென்றனர்.
இந்நிலையில் அவர்கள் இருக்கும் இடத்திற்கு இன்று அதிமுக கவுன்சிலர்கள் 2 பேர் சென்று அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். இதனால், இன்று நடைபெறும் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் பரபரப்பான நிலையை எட்டியது. அறிவித்தபடி விசிக தலைவர் பதவியை கைப்பற்றுமா அல்லது திமுக பறித்துக் கொள்ளுமா என்ற பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சூழலில் விசிக வேட்பாளருக்கு வெறும் மூன்று வாக்குகள் மட்டுமே கிடைத்தது, தேர்தலில் போட்டி வேட்பாளராக களம் இறங்கிய திமுக வேட்பாளர் வெற்றி பெற்று சேர்மன் பொறுப்பை கைப்பற்றினார். இந்த சூழலில் அங்கு வந்த விசிக மற்றும் திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, அப்போது சில திமுகவினர் செலவு செய்தது எல்லாம் நாங்கள் நீங்கள் நொட்டி கொண்டு போனால் பார்த்து கொண்டு இருப்போமா?
ஒழுங்காக உங்களுக்கு செலவு செய்த காசை வைத்து விட்டு செல்லுங்கள் என கூற இடமே ரணகளமானது. கூட்டணியை நம்பி தற்போது விசிக வெறும் மூன்று வாக்குகள் மட்டும் பெற்றதோடு பெருத்த அவமானத்தையும் சந்தித்துள்ளது. பாஜக எதிர்ப்பு என பேசி பேசி திமுக கூட்டணி கட்சிகளை முழுமையாக முடித்து விட்டது என்று நொந்து கொண்டு தலையில் முக்காடு போட்டபடி வேதனையாக பேசி வருகின்றனர் விசிகவினர்.
More watch videos