மக்களவை தேர்தல் தமிழகத்தில் தொடங்க இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. வேட்பாளர்கள் வேட்பு மனு நிறைவடைந்த நிலையில், வேட்பாளர்களின் மனுக்களை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது. இதனால் வேட்பாளர்கள் மக்களிடம் பிரச்சாரம் செய்ய தொடங்கியுள்ளனர். அந்த வகையில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் பேசியது மக்களிடம் முகம் சுளிக்கும் செயலாக அமைந்துள்ளது.
திமுக சார்பாக பெரியதாக நட்சத்திர பேச்சாளர்கள் யாரும் இல்லை, திமுக சார்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தான் கூட்டணி கட்சிகளும் ஆதவு தெரிவித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் செய்யக்கூடிய பிரச்சாரமானது மக்களிடம் பெரியதாக கவனம் செல்லுதவில்லையாம். மேலும், பழைய டெக்னீக்கை தொடர்வதாக கூறுகின்றனர். அதாவது, பிரச்சாரத்தின் போது நிர்வாகிகளின் வீட்டிற்கு சென்று டீ அருந்துவது போலும், மக்கள் நடமாடும் இடத்தில நடப்பது போன்றும் எல்லாம் பழைய ஸ்டையிலில் ஈடுபடுவதாக பேசப்பட்டது.
மறுபுறம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மீண்டும் செங்கலை கையில் எடுத்துக்கொண்டும், நீட் தேர்வை ஒழிப்போம் என்று பழையபடியே மக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், தேர்தல் தேதி எது என்று கூட தெரியாமல் உளறி வருகிறார். அதாவது, முதலில் ஜூன் 19 என்றும் அதன் பிறகு வேறு ஒரு இடத்தில ஆகஸ்ட் மாதம் தேர்தல் நாள் என்றும் கூறியது இங்கவே இப்படி உளர்றாப்புள்ள இன்னும் சினிமாவில் ஒரு வசனம் பேச எத்தனை முறை டேக் எடுத்திருப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் பங்கம் செய்து வருகின்றனர்.
இந்தசூழ்நிலையில், வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் குடியாத்தம் பகுதியில் நேற்று முன்தினம் திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண்களிடம் "எல்லாம் பேர் அண்டு லவ்லி பவுடர், சிங்கார் குங்குமம்.. பளபளன்னு இருக்கீங்க.. என்னானு தெரியல.. இன்னா காரணம்.. ஆயிரம் ரூவா வந்துச்சா... அதான்" என்றார். இந்த வீடியோ இணையத்தில் பரவி பெண்களிடம் எதிரிபு கிளம்பி வரும் நிலையில், இதற்கு கதிர் ஆனந்தும் அது எடிட் செய்யப்பட்ட வீடியோ என்று விளக்கம் கொடுத்துள்ளார். இருப்பினும் கதிர் ஆனந்த் மீது விமர்சனம் வந்த வண்ணம் உள்ளன.
துரைமுருகன் எப்படி பேசுவாரா அதேபோல் மகனும் பேசுவதாகவும் துரைமுருகன் சும்மா பேசினாலே இணையத்தில் ட்ரெண்டாகும் நிலையில் அவரது மகன் பேசியது போல் உள்ள வீடியோ இணையத்தில் உலா வருகிறது. இதை தாண்டி அனைத்து இடத்திலும் திமுவினர் பிரச்சாரத்தில் ஈடுபடும்போது மக்களிடம் கலசலப்பு ஏற்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.