Cinema

என்னது இவங்க ரெண்டு பேரும் ரகசியமா கல்யாணம் பண்ணிக்கிட்டார்களா???

SIDHARTH, ADITH RAV
SIDHARTH, ADITH RAV

இன்றைக்கு சின்னத்திரையில் இருந்து சினிமா துறை வரைக்கும் உள்ள நடிகை நடிகர்கள் தங்களின் திருமணங்களை பெரிய அளவில் கொண்டாடி வருவதை நாம் அனைவரும் இணையதளத்தில் அதிகமாக பார்த்து வருகிறோம். நிறைய பணங்கள் செலவழித்து ஆடம்பரமாக தங்களின் திருமணங்களை கொண்டாடி வரும் நடிகர், நடிகைகளின் மத்தியில் இங்கு இரண்டு பிரபலமான நடிகை மற்றும் நடிகர் வெளியில் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துள்ளார்கள்!!சினிமா துறையில் இருக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டு அதன் பிறகு திருமணம் செய்து கொள்வதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அஜித் ஷாலினி தொடங்கி, சூர்யா ஜோதிகா, சினேகா பிரசன்னா என்ன பிரபலமான நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து தொடர்ந்து அவர்களின் வாழ்வில் ஒன்றாக பயணித்து வருகின்றனர். 


இவ்வாறு இவர்களின் திருமணங்கள் கூட அதிக அளவில் பணம் செலவழித்து பிரம்மாண்டமாக இவர்கள் அனைவரும் திருமணம் செய்து கொண்டனர் அதைப்பற்றி நாமும் தெரிந்திருப்போம். இப்போது நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்கள் கூட அவர்களின் வீட்டில் நடக்கும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை கடன்களை வாங்கியாவது  பெரிய அளவில் நடத்தி வருகின்றன. ஆனால் இவர்களைப் போல் இல்லாமல்  தற்போது இரண்டு சினிமா பிரபலங்கள் பல காலங்களில் தற்போது ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்கள்.!!நடிகர் சித்தார்த் ஒரு பிரபலமான நடிகர், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வந்தவர் ஆவர். மேலும் இவர் நடித்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இவர் ஒரு தமிழ் பையன், தமிழ் குடும்பத்தில் தான் பிறந்துள்ளார். படிப்பை தாண்டி பாட்டு பாடுவது, டான்ஸ் ஆடுவது என பல போட்டிகளில் கலந்து வருவாராம். அதன்பின் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு முதலில் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார். பிறகு தான் இவருக்கு சினிமா துறையில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழில் பாய்ஸ் என்ற திரைப்படம் இவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது. மேலும் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் பல பிளாக் பாஸ்டர் மூவிகளை கொடுத்து வந்துள்ளார். சமீபத்தில் ஜிகர்தண்டா, அரண்மனை 2, டக்கர், சித்தா என தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் இவர் மகா சமுத்திரம் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். நடிப்பில் மட்டுமல்லாமல் இவர் பாட்டு பாடுவதிலும் சிறந்தவர் என்று அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இவர் நடிக்கும் படங்களில் மிகவும் இயல்பாக நடிப்பதால் அதில் நடிக்கும் நடிகைகளுடன் இவர் காதலில் உள்ளார் என்று பல செய்திகள் வெளியில் வரும். ஆனால் அவையெல்லாம் உண்மை அல்ல ஏனெனில் சித்தார்த்தருக்கு ஏற்கனவே மேகனா என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். அதன் பிறகு இவரின் திரைப்படங்கள் வெற்றி அடையும் நேரங்களில் இவரின் மனைவியை விவாகரத்து செய்த விவகாரம் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

அதற்குப் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஆகிய இருவரும் சேர்ந்து காதலித்து வருவது என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. இவர்கள் தொடர்ந்து அவர்களின் புகைப்படங்கள் ஆகியவற்றை இணையத்தில் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் அவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது அதிதி ராவின் குடும்பத்துக்கு சொந்தமான ஸ்ரீரங்கநாயக சுவாமி திருக்கோயிலில் எளிமையான முறையில் இவர்களின் திருமணம் குடும்பம் மற்றும் மிகவும் நெருங்கியவர்கள் மட்டும் சேர்ந்து மிகவும் ரகசியமாக நடந்துள்ளது என்று செய்திகள் எழுந்து வருகிறது. விரைவில் இதற்குரிய அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இருவரின் பேன்ஸ் அனைவரும் உற்சாகத்தில் கல்யாண போட்டோவை அப்லோட் பண்ணுங்க என கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். இதுமட்டுமிலால்ஏற்கனவே சமந்தாவை சம்பந்தப்படுத்தி சித்தார்த் உடன் ரகசியமாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது....