24 special

சனாதனத்தை தொடர்ந்து திமுக கிளப்பிய புதிய சர்ச்சை....இந்த ஸ்கெட்ச் நாடாளுமன்ற தேர்தலுக்கு?

Stalin, Rahul Gandhi
Stalin, Rahul Gandhi

நடந்து முடிந்த ஐந்து மணிலா தேர்தலிகளில் பாஜக மூன்று இடத்தில் பெரிய வெற்றி பெற்றது, எதிர்த்து நின்ற காங்கிரஸ் கட்சி நான்கு இடத்திலும் தோல்வியை தழுவியது. தென் இந்தியாவில் கால் பாதிக்காத பாஜக வடமாநிலத்தில் அதன் ஆதிக்கத்தை நிரூபித்து வருகிறது. இந்நிலையில் மாட்டு கோமிய மாநிலங்களில் வெற்றி பெறுவதுதான் பாஜகவின் திறமை என மக்களவையில் திமுக எம்.பி செந்தில்குமார் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.


கடந்த செப்டம்பர் மாதம் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட உதயநிதி மற்றும் எம்பி ஆ. ராசா, அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு பேசிய விவகாரம் இந்திய அளவில் இருந்து சர்ச்சை எழுந்தது. குறிப்பாக திமுக கூட்டணியான இண்டியா கூட்டணியில் இந்த பேச்சு பூதகரமானது. இது தொடர்பான வழக்குகளும் குவிந்தது. பாஜகவினர் மன்னிப்பு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியது இது தொடர்பான வழக்கு இன்னுமும் உயர் நீதிமன்றத்தில் நிருவாயில் உள்ளது. இதற்கடுத்ததாக கே.எஸ் பாரதி நாகலாந்து மக்களை இழிவு படுத்தும் விதமாக நாகலாந்து மக்கள் நாய் இறைச்சி உண்பவர்கள் என விமர்சித்திருந்தார், இதற்கும் கடும் கண்டனம் கிளம்பியது.

இதற்கு நாகலாந்து முதல்வர் வரை கண்டனம் வலுத்தது, ஏற்கனவே சனாதனம் பிரச்சனை முடிவுக்கு வராமல் இருந்த நிலையில் கே.எஸ்பாரதி புதிய சர்ச்சையை உண்டாக்கினார். தொடர்ந்து திமுகவினர் தமிழ்நாட்டில் பாஜக கட்சியை எதிர்ப்பதாக நினைத்து கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு பெரிய ஆப்பை கொடுத்தது. நடந்து முடிந்து வெளியான 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே ஆட்சியை பிடித்தது மீதமுள்ள மாநிலத்தில் ஏற்பட்ட தோல்விக்கு காரணம் அமைச்சர் உதயநிதி பேசிய சனாதன பேச்சு தான் காரணமே என காங்கிரஸை சேர்ந்தவர்களே குறை சொல்லும் அளவிற்கு கண்டனம் வலுத்தது. 

போதாத குறைக்கு ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைய செய்த திமுக, தற்போது மக்களவை கூட்டத்தில் பேசிய திமுக எம்பி பசு கோமிய மாநிலங்கள் (`கோ மூத்ரா' மாநிலங்கள்) என்று நாம் பொதுவாக அழைக்கும் ஹிந்தி பேசும் மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் மட்டுமே பாஜக வெற்றி பெறுகிறது. இதுவே பாஜகவின் பலம். ஆனால் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானாவில் நடைபெறும் தேர்தலில் அந்தக் கட்சியால் வெற்றி பெற முடிவதில்லை. இவ்வாறு அவர் பேசினார். இந்த பேச்சுக்கு டெல்லி தலைமை கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.  

தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் செந்தில்குமாருக்கு கண்டனம் கொடுத்த நிலையில், தான் பேசியதில் எந்த தவறும் இல்லை என சொன்ன செந்தில்குமார் தற்போது கண்டனம் வலுத்து வர தொடங்கியதும் தான் பேசியது தவறு தான் என சமூக தளத்தில் பதிவிட்டார். தொடர்ந்து இந்த சம்பவம் பெரும் அளவில் வெடித்துள்ளது. அதாவது, இந்து மக்களை இழிவு படுத்தும் வகையில் பேசி வருவதாக மக்களும் கண்டனம் கொடுத்து வருகின்றனர். அரசியல் விமர்சகர்களோ சனாதனம் பற்றி பேசிய திமுக 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மண்ணை கவ்வ வைத்தது. தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் வேலையில் எம்பி செந்தில்குமார் பேசியிருப்பது காங்கிரஸ் கட்சியை மொத்தமாக மூடிவிட முடிவு எடுத்துவிட்டு இப்படி பேசுவதாக அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.