24 special

அசோக் செல்வன் மனைவி கூட மாட்டிக்கிட்டாங்க... மொட்டைமாடியில் நின்று கதறல்...

keerthi pandiyan, rain issue
keerthi pandiyan, rain issue

 மழைக்காலமான நவம்பர் டிசம்பர் இரண்டு மாதங்கள் வருவதற்கு முன்பு இருந்தே ஒரு பகுதியில் மழைநீர் தேங்க கூடாது என்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெறுகிறது என்றால் அது சென்னை ஏனென்றால் அந்த அளவிற்கு மழைநீர் சென்னை பகுதி முழுவதும் தேங்கி மக்களின் அன்றாட வாழ்க்கையை சிரமத்திற்கு உள்ளாக்கிவிடும். அந்த வகையில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெய்த மழையிலே சென்னையின் சில பகுதிகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது ஆனால் தற்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையை கடந்த மிக்ஜம் புயலால் சூறாவளியோடு கூடிய கனமழை பெய்து பெரும் அளவிலான மழை நீர் வெள்ளப்பெருக்காக தேங்கி இருந்ததும் அதை சரி செய்வதற்கான பணிகள் அனைத்தும் தாமதமடைந்ததும் தற்போது செய்திகளாக  வெளியாகி வருகிறது. 


கன மழை நின்று இரண்டு நாட்களாகியும் இன்னும் சில பகுதிகளில் மின்சாரமும் இணைக்கப்படவில்லை தொலைதொடர்பு வசதியும் இணைக்கப்படவில்லை அது மட்டும் இன்றி தேங்கியிருந்த தண்ணீரின் அளவு இன்னும் குறையாமல் அப்படியே உள்ளதாகவும் மக்கள் கதறுகின்றனர். உங்களை நம்பி ஓட்டு போட்டதுக்கு உங்கள கழுத்தறுத்திட்டீங்க நம்ம வச்சு ஏமாத்திட்டீங்க உங்கள தான நம்பனும் என்ன நடவடிக்கை எடுத்தீங்க சாப்பிடுவதற்கு சாப்பாடு இல்லை! எங்களை மீட்பதற்கு யாரும் வரவில்லை 2015 செய்த மழையை விட தற்போது பெய்து உள்ள மழையின் அளவு அதிகம் இருப்பினும் அப்பொழுது கொடுக்கப்பட்ட உணவுகளும் நிவாரண உதவிகளும் தற்போது அதில் பாதி கூட கிடைக்கவில்லை என்று மக்கள் திமுக அரசின் மீது உள்ள கடும் அதிருப்தியை தெரிவித்தனர். 

இந்த மழை வெள்ளத்திற்கு இவர்கள் மட்டும் பாதிப்பை சந்திக்கவில்லை பெரும் நடிகை நடிகர்களும் சென்னை புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் அசோக் செல்வனை சமீபத்தில் மணந்த கீர்த்தி பாண்டியன் தங்கி இருந்த மயிலாப்பூர் பகுதியில் மழை நின்றும்  மழைநீர் வடியாமல் உள்ள நிலைமையை வீடியோவாக எடுத்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் இந்த பதிவில் மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலைக்கு அருகில் உள்ள விவேகானந்தா கல்லூரி. இங்குள்ள தண்ணீரை சுத்தம் செய்ய யாரும் வரவில்லை. நேற்று முதல் இப்படித்தான், நிமிடத்துக்கு நிமிடம் அதிகளவு சாக்கடை நீர் வெளியேறி கலக்கிறது. இங்கு தரை தளத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதற்கும் மயிலாப்பூரின் மற்ற பகுதிகளுக்கும் ஏதாவது செய்யுங்கள்.

2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் கூட இங்கு தண்ணீர் தேங்கவில்லை. ஆண்டு முழுவதும், அவர்கள் சாலைகளைத் தோண்டிக்கொண்டே இருந்தனர், மேலும் பல முறை சாலைகள் குழிந்து, அவை மீட்டெடுக்கப்பட்டன. தற்போது எல்லாம் தலைகீழாக மாறி தண்ணீர் முற்றிலும் தேங்கியுள்ளது. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் உள்ளவர்கள் அடிப்படை தேவைகள் மற்றும் வசதிகளை பெற வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது. தண்ணீர் கூட அருந்துவதில்லை. தற்போது 48 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லை. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நாங்கள் அபார்ட்மெண்டிலிருந்து வெளியே வரும் வரை அல்லது மொட்டை மாடியில் சில மூலைகளுக்குச் செல்லும் வரை நெட்வொர்க் இல்லை.

சென்னை போலீஸ், சென்னை மாநகராட்சி  தயவு செய்து இந்தப் பகுதியைப் பற்றி விரைவில் ஏதாவது செய்யுங்கள்! என மழைநீர் தேங்கி இருப்பதற்கான காரணத்தையும் மழைநீர் வடியாமல் உள்ளதையும் கூறியுள்ளார். திரைத்துறையில் இவர் மட்டும் இன்றி நடிகர் விஷ்ணு விஷாலும் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட செய்தியை தெரிவித்து இருந்தார். மேலும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சென்னை இப்படி வெள்ளக்காடாக காட்சியளிப்பதற்கு அரசின் அலட்சியமே காரணம் என்றும் கூறியிருந்தார். ஏற்கனவே விஷால் வேறு, இப்படி தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் திரையுலகம் என அனைவரும் கதறி வருவது சென்னையின் அவல நிலையை எடுத்துக்காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.