தமிழ் திரைப்படம் மற்றும் நாடகங்களில் துணை நடிகையான வளம் வரும் நடிகை ஷர்மிளா, ஒரு மருத்துவரும் சமூக ஆர்வலர்கள் கூட மேலும் இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர். இன்றளவும் இவர் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் துணை நடிகை கேரக்டரையும் வில்லி கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார். அனைத்தையும் தாண்டி சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக செயல்படுபவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த இவர் திமுகவிற்கு ஆதரவாக கருத்துக்களையும் பாஜகவிற்கு எதிரான கருத்துக்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவார். மேலும் தனது முழு நேர வேலையாக பிரதமர் நரேந்திர மோடி குறித்த விமர்சனங்களையும் பிரதமர் குறித்த போலியான கருத்துக்களை பதிவிடுவதையும் தனது வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இஷ்டத்திற்கு தனக்கு தோன்றும் சில கருத்துக்களை பதிவிட்டு பல ட்ரோல்களை சந்தித்தவர் டாக்டர் ஷர்மிளா. அப்படி ஒரு சர்ச்சையாக திருவாரூர் தெற்கு ரதவீதிக்கு கருணாநிதியின் பெயரை வைப்பதாக திமுக தீர்மானம் நிறைவேற்றியது அந்த நிலையில் பாஜகதனை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தியதால் அந்த அறிவிப்பை திமுக திரும்ப பெற்றுக் கொண்டது. இதற்கு முன்னதாக பட்டினப்பிரவேசத்திற்கு முழுமையாக தடை விதித்த திமுகவை எதிர்த்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் எச்சரிக்கை விட்ட பின்னர் பட்டினப்பிரவேசத்திற்கு திமுக அனுமதி அளித்தது. இந்த விவகாரத்தில் திமுகவுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்ற வகையில் ஷர்மிளா 'திராவிட மாநிலம் கடந்த ஒரு வாரமா டோடல் டேமேஜ் தப்பு நடந்தா சொல்லணும் சொல்லுவோம்' என்ற பதிவிற்கு வலதுசாரிகள், இணையதள வாசிகள் கடுமையான விமர்சனங்களை பதிலாக அனுப்பி டாக்டர் ஷர்மிளாவை கலாய்த்து தள்ளினார்கள்
இந்த சம்பவத்திற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி குறித்து போலி பதிவிட்டு அவரை ஒருமையில் குறிப்பிட்டிருந்தார் இதற்கு பல கண்டனங்கள் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டது. அந்த எதிர்ப்புகளில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் கொடுத்த பதிலடி டாக்டர் ஷர்மிளாவை வாயடைத்துப் போக வைத்தது. இப்படி மாறி மாறி பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில பதிவுகளை பதிவிட்டு அவரே வாங்கிகட்டிக் கொள்ளும் சம்பவங்கள் பல நடந்து வந்துள்ளது. இந்த நிலையில் பாஜக பிரமுகரிடம் மற்றுமொரு பதிவு மூலம் விமர்சனத்தை பெற்றுள்ளார் டாக்டர் ஷர்மிளா. அதாவது பாஜகவில் சமீபத்தில் இணைந்த திருச்சி சூரியா சிவா சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இவர் அரசியலில் வருங்காலத்தில் எம்பி ஆக கூட ஆகலாம் என்ற வகையில் திருச்சி சூரியா சிவாவை கூறி வருகின்றனர்.
சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த டாக்டர் ஷர்மிளா ‘ஏன் மேன் … நீ மட்டும் நமிழ்நாடு குடிகார மாநிலம்னு சொல்லலாம் …அவர் கோமிய மாநிலம்னு சொல்லக்கூடாதா? கோமியத்தை புனிதம்னு சொல்ற குரூப் தானே நீங்க… நியாயமா பாத்தா அவர் சொன்னதுக்கு சங்கிகள் சந்தோஷப்படணும்யா’ என்று திமுக எம்பி செந்தில்குமார் க்கு ஆதரவாக பேசுவது போன்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவில் உள்ள தவறை சுட்டிக்காட்டிய பாஜக பிரமுகர் திருச்சி சூரியா சிவா 'அக்கா எங்களுக்கு புத்திமதி சொல்லுறதுக்கு முன்னாடி முதல்ல உன் புத்தியை கொஞ்சம் வளர்த்துக்கிட்டு வா. தமிழ்நாட்டுக்கு ஸ்பெல்லிங் கூட கரெக்டா எழுத தெரியல இதுல பேச்சா பாரு' என்று பங்கமாக ட்ரோல் செய்துது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த விவகாரம் தேவையா என ஷர்மிளாவை விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்...