புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த மணல் கொள்ளை சம்பவத்தை வீடியோ ஆதாரத்துடன் பதிவிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது இப்போது அரசு என்ன முடிவு எடுக்கும் என சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் கொலை கொள்ளை போன்ற சம்பவம் அரங்கேறி வருகிறது அதுவும் மணல் கொள்ளை சம்பவம் திமுக நிர்வாகிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மணல் சுரண்டப்படுவது பகற் எழுந்து வந்தது. அதன் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறை தொடர் சோதனையில் ஈடுப்பட்டு வருகிறது, அதும் குறிப்பாக மணல் விவகாரத்தில் அமலாக்கத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று சொல்லலாம். ஆற்று மணல் தொடர்பாக முத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி வரும் நிலையில் தமிழக அரசு அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்து அரசு அதிகாரிகளை விசாரிக்க தடை கோரியது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மங்களத்துப்பட்டி கிராமத்தில் சிலர் ஜேசிபி, டிப்பர் லாரி கொண்டு செம்மணல் அள்ளி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கிராம நிர்வாகி மற்றும் மாவட்ட நிர்விகளிடம் முறையிட்டுள்ளனர். பல முறை இதனை எதிர்த்து போராட்டம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. புகாரின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் திடிரென்று அங்கு விசிட் அடித்தார். அப்போது அங்கு மணல் அள்ளுவது நடந்து கொண்டு இருந்தது.
இதனை உடனே தனது செல்போனில் புகைபிடிக்க ஆரம்பித்தார், அப்போது அங்கு இருந்த திமுக நிர்வாகி ஒருவர் "அரசாங்கமே எங்களோடது தான், எங்க அரசாங்கத்துல அரசு இடம் எங்களோடது தான், இதுல மன்னு கூட அல்ல உரிமை இல்லையா," என்று கூறியபடியே மணல் நிரப்பிய லாரி, ஜேசிபியை எடுத்து கொண்டு சென்றர்கள். மேலும், உங்களுக்கு யார் புகார் கொடுத்தார் அவர்களை சொல்லி காலி செய்து விடுகிறேன் என மிரட்டும் பாணியில் பேசியதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மணல் அள்ளுவோர்களை கைது செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர். கிராமக் நிர்வாக அலுவலர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பான வீடியோவை பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக தளத்தில் பதிவிட்டு "இது போன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் தி.மு.க.வினர் சட்டவிரோதமாக செம்மண் அள்ளுவதற்கு சுதந்திரம் பெற்றுள்ளனர். அவர் ஒரு படி மேலே சென்று, இந்த சட்டவிரோத மணல் அகழ்வை அம்பலப்படுத்தியதற்காக விசில்ப்ளோயர் மற்றும் VAO வை அச்சுறுத்துகிறார். இது போன்ற பகல் கொள்ளையால் கடந்த 1-2 ஆண்டுகளில் கருவூலத்திற்கு ஏற்பட்ட ₹4700 கோடி இழப்பு கணக்கில் வரவில்லை. இந்த மோசடி சிபிஐ விசாரணைக்கு உகந்த வழக்கு இல்லையா?...என முதல்மைச்சர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது போட்ட பதிவையும் போட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.