புதுச்சேரி மாநிலத்தில் பாஜக என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது, கடந்த மாதம் வரை புதுச்சேரி அமைச்சரவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திர பிரியங்கா போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வகித்து வந்தார். திடீரென அவர் ஒரு நாள் 'நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். கட்சியில் மற்றும் அமைச்சரவையில் என்னை சாதி ரீதியாக ஒதுக்குகிறார்கள், நான் தாழ்த்தப்பட்ட பெண் என்பதால் ஒதுக்கப்படுகிறேன் எனது அமைச்சர் பதவியை வேறு எந்த சாதி பிரதிநிதிக்காவது கொடுக்க வேண்டும்' என கடிதம் எழுதினார்.
இது குறித்து அப்போது பல சர்ச்சைகள் நிலவியது, இருப்பினும் இது குறித்து புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறும் பொழுது 'அது போன்ற பிரச்சனை எதுவும் இருப்பதாக தெரியவில்லை! அப்படி இருந்தால் என்னிடம் தெரிவித்திருந்தால் நானே சரி செய்திருப்பேன்' என கூறினார். இந்த நிலையில் புதுச்சேரியில் இருக்கும் ஒரு தொழிலதிபருக்கும் சந்திர பிரியங்காவிற்கும் உள்ள தொடர்பு காரணமாக அவர் தனியாக கட்சி துவங்க திட்டமிட்டார் இதன் காரணமாகத்தான் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்திர பிரியங்காவை அழைத்து கண்டித்துள்ளார். இதை விஷயத்தை வேறு மாதிரி மாற்றி சந்திர பிரியங்கா நாடகமாடுகிறார் என்ற தகவல்களும் கசிந்தன.
அதனை தொடர்ந்து தனது கணவரை விவாகரத்து செய்யப் போகிறேன் எனக் கூறிய அமைச்சர் சந்தர்ப்பியங்கா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்தபடியாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகள் தான் நடனமாடிய வீடியோவை கணவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தது குறித்து காவல்துறை வசம் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்மொழி புகார் ஒன்றை அறிவித்தார் சந்திர பிரியங்கா. இப்படி புதுச்சேரி அரசியலில் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் சந்திர பிரியங்கா விவகாரம். இந்த நிலையில் திடீரென அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட பிறகு முதன் முறையாக மாநில முதல்வர் ரங்கசாமியை சந்திர பிரியங்கா சந்தித்துள்ளார். இது குறித்து புதுவை அரசியல் வட்டாரங்களில் விசாரித்த பொழுது பல தகவல்கள் கூறினர்.
அவசரப்பட்டு அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்து விட்டோம். அரசியல் ரீதியாக மதிக்க மாட்டேன் என்கிறார்கள் இது மட்டுமல்லாமல் சந்திர பிரியங்கா இரண்டாவதாக திருமணம் செய்ய இருந்த அந்த தொழில் அதிபர் வேறு சந்திர பிரியங்காவை தற்போது புறம் தள்ளிவிட்டாராம், சந்திர பிரியங்கா ஃபோன் செய்தால் எடுப்பதே இல்லை என்றும் வேறு சிலதகவல்கள் கசிகின்றன. முதல் கணவரும் விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது ஆசைப்பட்ட நபரும் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நிலையில் விரும்பிய அமைச்சர் பதவி வேறு தனக்கு விட்டு சென்றது என சந்திர பிரியங்கா சில நாட்கள் வெளியில் வராமல் இருந்தார்.
இதன் காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் தற்பொழுது புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளும்படி கூறி வேண்டுகோள் எடுத்துள்ளார் எனவும் கூறுகின்றனர். ஆனால் அமைச்சர் சந்திர பிரியங்கா தரப்பில் இது குறித்து விசாரித்த பொழுது சந்திர பிரியங்கா தொகுதியில் உள்ள கோவில்களில் ஒரு கால பூஜைக்கான காசோலை பெற முதலமைச்சரை சந்தித்து அவரிடம் கோரிக்கை வைத்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது. சந்திர பிரியங்கா என்றாலே புதுச்சேரி அரசியலில் சர்ச்சை என ஆகிவிட்டது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும் இவர் அடுத்த தேர்தலிலும் போட்டியிட முதல்வர் ரங்கசாமியிடம் வேண்டுகோள் விடுத்ததாக வேறு செய்திகள் தெரிவிக்கின்றன.