நாடு முழுவதும் இன்னும் ஐந்து மாத காலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் ஆளும் பிஜேபி தரப்பு மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க உட்கட்டமைப்பு மற்றும் தேர்தல் வேலைகள் என தனது அசுர பலத்தை முடுக்கி விட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I என்கின்ற கூட்டணியை உருவாக்கியுள்ளன. I.N.D.I கூட்டணியின் கூட்டம் மூன்று முறை நடந்ததற்கு பிறகு அடுத்த கட்டமாக நான்காவது கூட்டம் விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மூன்று கூட்டத்திலும் I.N.D.I கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என அறிவிக்காமல் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.ஒரு சிலர் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் வேண்டும் என கோரிக்கையை வைத்த பொழுது அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி ஆகியோர் ராகுல் காந்தி வேட்பாளராக இருக்கவே கூடாது காங்கிரஸின் இத்தனை ஆண்டு கால தோல்விக்கு காரணம் ராகுல் காந்தி தான், ராகுல் காந்தி வேட்பாளராக இருந்தால் நாங்கள் I.N.D.I கூட்டணியை விட்டு வெளியேறுகிறோம் என கூறியதாக தகவல்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் பிரதமர் மோடியை எதிர்த்து யார் பிரதம வேட்பாளர் என அறிவிக்காமல் தேர்தலை சந்திப்பது I.N.D.I கூட்டணியின் தற்கொலைக்கு சமம், I.N.D.I கூட்டணி பிரதமர் இவர்தான் என அறிவித்துவிட்டு தேர்தலை சந்தித்தால் தான் பிரதமர் மோடியை ஓரளவுக்காக எதிர்க்க முடியும், பிரதமர் யார் என தெரிவிக்காமலேயே பாஜகவை எதிர்ப்பது I.N.D.I கூட்டணிக்கு சற்று சிரமமான விஷயம் தான் என அரசியல் விமர்சகர்கள் கூறி வந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் 5 மாநில தேர்தல் வந்தால் பாருங்கள் I.N.D.I கூட்டணி சுக்கு நூறாக உடைந்து விடும், இந்த கூட்டணி நீண்ட நாட்கள் நிலைக்காது இவர்கள் தங்கள் சுயலாபத்திற்காகவும் மோடியை எதிர்ப்பதாக எதிர்ப்பதாக ஒன்று கூடி உள்ளனர் என கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் I.N.D.I கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து கனிமொழி கூறிய விஷயம் தான் தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கருணாநிதி நூற்றாண்டு விழாவில் ஒரு பகுதியாக நிகழ்ச்சி ஒன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிகள் எம்பி கனிமொழி கலந்துகொண்டு பேசினார், அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் I.N.D.I கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் குறித்து யார் என கேள்வி எழுப்பப்பட்ட போது 'ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் I.N.D.I கூட்டணிக்கும் நாட்டுக்கும் நம்பிக்கை தரக்கூடிய முடிவாக இருக்கும். I.N.D.I கூட்டணி பிரதமர் வேட்பாளர் குறித்து ஐந்து மாநில தேர்தல் முடிவுக்கு பின் தலைவர்கள் கூடிய முடிவு செய்வார்கள்' என பூசி மொழுகும் விதமாக பேசினார்.
இது மட்டுமல்லாமல் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக வரவேண்டும் என்பதையும் கனிமொழியும் விரும்பவில்லை, ஏற்கனவே கனிமொழி காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை தூத்துக்குடி தொகுதியில் அவருக்கு பின்னடைவு, பிரதமர் கூட்டணி இல்லாமல் இருப்பதும் பின்னடைவு என கள நிலவரங்கள் இருக்கும் காரணத்தினால் யார் தேர்தல் வேட்பாளர்? யார் பிரதமர் வேட்பாளர்? என கூறுவதிலேயே தற்போது குழப்பத்தை கனிமொழி சந்தித்து வருவதாகவும் அதன் காரணமாகத்தான் பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பூசி முழுவது போல் பதில் சொன்னதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லாம் கனிமொழிக்கு ஏற்பட்ட தோல்வி பயம்தான் காரணம் எனவும் வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.