டி.ஆர்.பாலு திமுக மேடையில் பேசிய கருத்து தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக திரும்பி இருக்கிறது, செந்தில் பாலாஜி அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்ட சூழலில் அவருக்கு ஆதரவாக கொங்கு மண்டலத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் கண்டன கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் கோவையை தேர்வு செய்து திமுக கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களும் வரவேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து நேரடியாக அழைப்பு செல்ல எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் கோவை செல்ல தயாரானார்கள்.
கோவையில் பேசிய திமுக கூட்டணி தலைவர்கள் பலரும் செந்தில் பாலாஜி கைதை கண்டித்ததோடு நில்லாமல் ஒருவர் விடாமல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்தார்கள், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு ஒரு படி மேலே சென்று அண்ணாமலையை ஒருமையில் விமர்சனம் செய்தார் இப்படி செந்தில் பாலாஜிக்கு ஆதரவாகவும் பாஜகவிற்கு எதிராகவும் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் டி ஆர் பாலு பேசிய ஒரு கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பலத்த சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
செந்தில் பாலாஜியை அமலாக்க துறை மனிதாபிமானமாற்ற முறையில் நடத்துவதாக தெரிவித்த டி ஆர் பாலு இறுதியாக செந்தில் பாலாஜி பேண்டில் யூரின் போகும் அளவிற்கு கொடுமை படுத்தி இருக்கிறார்கள் என பேசி இருந்தார். இங்குதான் சிக்கல் உண்டாகி இருக்கிறது அமைச்சர் செந்தில் பாலாஜியை அவரது ஆதரவாளர்கள் சிங்கம் என கோவை முழுவதும் போஸ்டர் ஒட்டி வரவேற்ற நிலையில் டி ஆர் பாலு செந்தில் பாலாஜி அமலாக்க துறை விசாரணையின் போது யூரின் போய்விட்டார் என மேடையில் பேசியது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை சந்திக்க நேரிட்டு இருக்கிறது.
வீரர் என பேசப்படும் செந்தில் பாலாஜிக்கு இந்த நிலையா என பலரும் கிண்டல் செய்யும் நிலைக்கு சென்று இருக்கிறது, டி ஆர் பாலு செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக பேச சென்று தற்போது அதுவே செந்தில் பாலாஜிக்கு எதிராக திரும்பி இருப்பது சமூக வலைத்தளங்களில் பலத்த கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது.