24 special

எஸ்.வி சேகரின் பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது...!இப்படி பட்டவரா எஸ்.வி சேகர்...?

Sv sekar,annamalai
Sv sekar,annamalai

எஸ்.வி.சேகரின் அண்ணாமலை எதிர்ப்பு, சமூக வலைதள புலம்பலுக்கு பின்னணியில் எஸ் வி சேகரின் சாதி வெறி தற்போது அம்பலமாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.சினிமாவின் முக்கிய பிரபலமாக உள்ள எஸ் வி சேகர் அரசியலில் நீண்ட காலமாக இருந்து வருகிறார் இவர் முதலில் அதிமுகவிலிருந்து பிறகு காங்கிரசிற்கு மாறி தற்போது பாஜகவில் உள்ளார். தற்போது பாஜகவில் எஸ் வி சேகர் இருந்தாலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இவருக்கும் சில கருத்து மோதல்கள் அவ்வப்போது நிகழ்வது வழக்கமாக உள்ளது.


அண்ணாமலைக்கு எதிராக எஸ் வி சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அடிக்கடி பதிவிட்டு வந்தார். இதனால் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் எஸ் வி சேகரை விமர்சனம் செய்து வந்தனர் மேலும் இது பற்றி அண்ணாமலையிடம் பத்திரிகை சந்திப்பில் இது தொடர்பாக கேள்வி எழுப்பிய பொழுது புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் நேரடியாக டெல்லி சென்று புகார் அளிக்கலாம் அதற்கான பயண விமான டிக்கெட்டை நானே பெற்று தருகிறேன் சென்று வாருங்கள் என்று கூறியிருந்தார். நான் எந்த ஒரு நிலைக்கு சென்றாலும் இதேபோன்றுதான் இருப்பேன் என்றும் தனது நிலையை நிறுத்தி உறுதி செய்துள்ளார். 

அண்ணாமலையில் இந்த பதிலால்  கோபம் அடைந்த எஸ் வி சேகர் எப்படி இவர் எனக்கு டிக்கெட் தருகிறேன் என கூற முடிகிறது இவரே தனது நண்பர்கள் உதவியால் செலவுகளை மேற்கொண்டு வருகிறார் இதில் எனக்கு எப்படி டிக்கெட் வாங்கி தருவார் இப்படி ஒன்றும் எனக்கு தேவையில்லை மேலும் அண்ணாமலையை பற்றி புகார் அளிப்பதற்காக நான் டெல்லி செல்ல வேண்டிய அவசியம் இல்லை நேரம் வந்தால் அவர்களே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் நான் வாஜ்பாய் காலத்திலேயே அப்படி பிரச்சாரம் செய்தேன் தற்போது அண்ணாமலை பேசுவதெல்லாம் குழந்தைத்தனமாக உள்ளது, மேலும் அண்ணாமலையை நான் ஏதாவது சொல்லிட்டா கடவுளே ஏதோ சொல்லிட்ட மாதிரி எதிர்த்துக்கொண்டு பெருக்க கூட்டமே வருகிறது இது பெரும் முட்டாள் தனம் இதற்கெல்லாம் நான் பயப்பட போவதில்லை என்று அண்ணாமலை மீது உள்ள கோபத்தை எனக்கு என்ன அவர் மீது கோபமோ என்று மழுப்பி விமர்சனங்களை முன் வைத்தார். 

நேற்று முன்தினம் பாஜகவின் ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை புரிந்தார் மேலும் அந்த பொதுக் கூட்டத்தின் பொழுது அண்ணாமலையை மிகவும் பாராட்டி பேசி இருந்தார் அமித்ஷா. மேலும் அமித்ஷாவின் இந்த வருகை முழுவதுமே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகிய இருவருடன் அமித்ஷா மிக நெருக்கமாக இருந்ததும் எஸ்வி சேகருக்கு பிடிக்கவில்லை, இதன் காரணமாக தன்னுடைய  டிவிட்டர் பதிவில் அண்ணாமலை மற்றும் எல். முருகனை குறிப்பிட்டு மிகவும் கேவலமான பதிவை பதிவிட்டு இருக்கிறார்,  இது தற்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது அந்த பதிவில் செங்குன்றத்தை அடுத்த பகுதியில் பாஜகவை சேர்ந்த மிளகாய் பொடி வெங்கடேசன் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை கைப்பற்றிய தொடர்பான செய்தி ஒன்று தொலைக்காட்சியில் நிலவிக் கொண்டிருந்ததை வீடியோவாக எடுத்து தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் எஸ் வி சேகர்,  மேலும் இந்த செய்தியில் குற்றம் சாட்டப்பட்டவர் அண்ணாமலையின் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதால் 'அண்ணனின் அருமை விசுவாசிகள் என்று மேற்கோள்காட்டி அந்த வீடியோவை பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதன்மூலம் எஸ்வி சேகர் தனது சமுதாயத்தினரை தவிர வேறு யாரும் பாஜகவில்  தலைவராக வந்து விடக்கூடாது என்பதை உறுதியாக இருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.  இது மட்டுமல்லாமல் கடந்த வாரத்தில் எஸ். வி. சேகர் உதயநிதியை பாராட்டி பேசியதும் குறிப்பிடத்தக்கது. இப்படி எஸ் வி சேகர் பாஜக வளர்ந்து விடக்கூடாது மற்றும் தங்கள் சமுதாயத்தை தவிர மற்றவர்கள் தலைவராக வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக பெயர் வெளியிட விரும்பாத சிலர் கூறி வருகின்றனர், இதன் விளைவாகவே எஸ்வி சேகர் இப்படி நடந்து கொள்கிறார் என்றும்  தெரிவிக்கின்றனர்.