24 special

ப்பா என்ன தைரியம் அந்த பொண்ணுக்கு!! அசால்டாக எல்லா வகை பாம்புகளையும் பிடிக்கும் இளம் பெண்!!


காடுகள் எல்லாம் அழிந்து தற்பொழுது வீடு மற்றும் நிறுவனங்களாக மாறி வருகிறது. இதனால் காடுகளில் வசிக்கும் உயிரினங்கள் தொடர்ந்து எங்கே செல்வது என்று தெரியாமல் மக்கள் வாழும் பகுதிகளுக்கு வருகிறது. குறிப்பாக ஊர்வனங்கள் வகையை சேர்ந்த பாம்பு போன்றவை நீர் நிலைகளிலும் வீடுகளில் மற்றும் பொது இடங்களுக்கு தங்களின் உணவுகளை தேடி வந்து விடுகிறது. தங்கள் வசிக்கும் காடுகளை பொதுமக்கள் அழித்து வீடுகள் கட்டினால் விலங்குகள் மற்றும் ஊர்வலங்கள் எங்கே செல்லும்?? மக்கள் வாழும் இடங்களை நோக்கி தான் வரும்!! அதனால் அந்த உயிரினங்களை எந்தவித குறையும்  சொல்லிவிட முடியாது. 


இதில் அவற்றின் தவறுகள் எதுவுமே கிடையாது என்பதே உண்மை!! முதலில் அதிக அளவில் எல்லா இடங்களிலும் மரம் செடி கொடிகள் வளர்க்கப்பட்டு வந்தது. அவ்வாறு இருக்கும் மரம் மற்றும் செடி கொடிகளில் பாம்புகள் சென்று தங்கி செல்லும். ஆனால் இன்றைய காலங்களில் தொடர்ந்து மரங்களை வெட்டி வருவதினால் அவற்றிற்கு தங்குவதற்கு கூட இடமே இல்லாமல் ஆகிவிட்டது. அதனால் வீடுகளுக்குள் புகுந்து மறைவான இடத்திற்கு சென்று விடுகிறது. அவ்வாறு வீட்டுக்குள் வந்த பாம்பினை பார்த்தவுடனே வீட்டில் உள்ள அனைவரும் மக்கம் பக்கத்தினரை அழைத்து ஒன்றாக கூடி அடித்துக் கொன்று தூக்கிப்போட்டு விடுகின்றனர். 

இதனால் தொடர்ந்து பாம்புகளின் இனங்கள் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் எங்கு பாம்பு வந்தாலும் அவற்றை உயிருடன் பிடித்து அவற்றிற்கான காடு போன்ற இடங்களில் உயிருடன் விடுவித்து இதைப் பார்த்து மகிழும் பெண் ஒருவரின் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது!! பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று இருக்கும் சமயத்தில் பயமில்லாமல்  இவர் செய்யும் காரியத்திற்கு அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பெண் அளித்த பேட்டி தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பது என்னவென்றால்.. 

தனது 14 வயதில் இருந்தே பாம்பினை பிடிக்க பழகியதாகவும், முதலில் பாம்பு பிடிக்க தெரியாமல் இருந்த இவர் அதன் பிறகு தகுந்த பயிற்சி எடுத்து பழகிக் கொண்டதாகவும் கூறியுள்ளார். முதன் முதலில் பக்கத்து வீட்டில் பாம்பு நுழைந்த பொழுது அதனை அடித்துக் கொள்வதற்காக பலரும் கூடிய நிலையில் அந்த பாம்பினை காப்பாற்றுவதற்காக முன்வந்து அந்தப் பாம்பினை சரியாக கையாண்டு பிடித்து அதனை காட்டுக்குள் விடுவித்தாராம்!! இதனைத் தொடர்ந்து சரியான முறைகளை கற்றுக்கொண்டு நிறைய பாம்புகளை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்ததாகவும், பயிற்சிக்குப் பிறகு பாம்பு குறித்தும், அவற்றை எவ்வாறு சரியான முறையில் கையாளுவது என்பது குறித்து தெரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.  

இந்த நிலையில் இவர் 500க்கும் மேற்பட்ட பாம்பு வகைகளை உயிருடன் மீட்டு காப்பாற்றியுள்ளதாகவும், தற்பொழுது தமிழ்நாட்டு வனத்துறையுடன் இணைந்து வீடுகளில் நுழையும் பாம்புகளை மீட்டு பாம்பிற்கும் சரி சுற்றி உள்ளவர்களுக்கும் சரி எந்தவித பாதிப்பும் இல்லாமல் அதனை வனத்துறையினர்கள் கூறும் இடத்தில் முறையாக விடுவித்து விடுவதாகவும் கூறியுள்ளார். வெறும் 24 வயதான இளம் பட்டதாரி பெண் இப்படி பயமே இல்லாமல் எல்லா வகையான பாம்புகளையும் மிகவும் பத்திரமாக மீட்டெடுத்து அவற்றை கைகளில் பிடித்து காட்டுக்குள் விடுவதை பார்க்கும் பொழுது மிகவும் வியப்பாகவே உள்ளது. இதனால் பாம்புகளின் இனங்கள் அழிவது ஓரளவிற்கு குறைக்க முடியும் என்று பலரும் கூறி வருகின்றனர். மேலும் இளம்பெண்ணின் முயற்சிக்கு தொடர்ந்து பாராட்டுகளும் எழுதுகிறது. இது குறித்து வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகில் வருகிறது.