தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மலையாள நடிகைகளின் ஆதிக்கமானது அதிகரித்து காணப்பட்டுள்ளது. இவற்றை ஆதிக்கம் என்று கூறுவதை விட தமிழ் இளைஞர்கள் கேரள நடிகைகள் பக்கம் திரும்புவதும் அவர்களை தங்களது ஃபேவரிட் ஹீரோயினாக பார்த்து வருவதும் வழக்கமாக நடந்து வருவது தான். அந்த வகையில் அசின், நயன்தாரா, நஸ்ரியா மற்றும் இன்னும் பல நடிகைகள் உள்ளனர், இவர்களின் வரிசையில் தற்போது பலரின் ஒரு பேவரிட் ஹீரோயினியாக மாறி வருபவர் ஷாலின் சோயா. இவர் கேரள மாநிலம் திருரைச் சேர்ந்தவர் இவரின் தந்தை ஒரு தொழிலதிபர் மேலும் தாயார் ஒரு நடன ஆசிரியர். சிறுவயதிலிருந்தே தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய சோயா மலையாளத்தில் பிரபல டிவி தொலைக்காட்சியில் ஆங்கர் ஆக பணியாற்றினார்
அதன் மூலம் கிடைத்த வரவேற்பை அடித்து தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார் கிட்டத்தட்ட மலையாளத்தில் மட்டும் 15 படங்களில் நடித்துள்ளார் ஷாலின். இதனைத் தொடர்ந்து தமிழில் இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று ராஜா மந்திரி, மற்றொன்று கண்ணகி. இந்த இரண்டு திரைப்படங்களில் சமீபத்தில் தான் கண்ணகி திரைப்படம் வெளியானது அந்த கண்ணகி திரைப்படத்தில் ஒரு சேலஞ்சிங்கான மாடலான நவீன பெண்ணாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தின் மூலம் அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது ஏனென்றால் இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்தில் அனைவருமே மிரள வைத்து இருப்பார். இதனைத் தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகப்படும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டார்.
ஆரம்பத்தில் இவர் பேசுவதும் இவர் நடந்து கொள்ளும் விதமும் பார்வையாளர்கள் மத்தியில் கவனிக்கப்படவில்லை மேலும் என்ன இந்த பொண்ணு இப்படி பண்ணுது என்ற வகையிலான ஒரு பார்வையையே ஏற்படுத்தியது. ஆனால் நாளுக்கு நாள் அந்த நிகழ்ச்சியில் சோயாவின் குறும்புத்தனங்கள் பேசும் பேச்சுக்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் தற்போது தமிழக மக்கள் மத்தியில் க்யூட் நடிகையாகவும் வளர ஆரம்பித்துள்ளார் சோயா! முன்னதாக இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சோயாவிற்கு கிடைத்த விமர்சனங்கள் அவரது காதலரான டிடிஎஃப் வாசனை கடுப்படையை செய்ததால் அது குறித்த சர்ச்சைக்குரிய வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். இது சமூக வலைதளத்தில் பல விமர்சனங்களை பெற்றது. ஆனால் தற்பொழுது சோயாவிற்கு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஆனால் இவரின் காதலரான டிடிஎஃப் வாசன் சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு சென்று சர்ச்சைக்குரிய வகையில் ஒரு காமெடி வீடியோவை எடுத்து ஏழுமலையான் தேவஸ்தானத்தின் கோவத்திற்கு ஆளானார். இதனை அடுத்து அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மண கோலத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அவர் ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே அதிகமாக பகிரப்பட்டதை அடுத்து தொடர்ச்சியாக டிடிஎஃப் சர்ச்சைகளில் ஈடுபட்டதால் திடீரென்று திருமணத்தை அறிவித்தாரா சோயா அல்லது இவருடைய திருமணம் யாருடன் என்ற ஒரு கேள்வி பரபரக்க ஆரம்பித்தது. ஆனால் அந்த புகைப்படம் சோயா தற்போது புதிதாக நடித்து வருகின்ற ஒரு திரைப்படத்தில் எடுக்கப்பட்ட காட்சி தான் என்பது தெரியவந்துள்ளது இது சமூக வலைத்தளத்தில் எழுந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.