நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் 5 நாள் நடைபெறுகிறது. இதனையொட்டி, நேற்று முதல் நாள் சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் நாட்டின் அனைத்து எம்.பிக்களும் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, மணிப்பூர் விவகாரத்தை மையப்படுத்தி பிரச்சினையைக் கிளப்பினார். மேலும், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில், மணிப்பூர் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.ஆ.ராசாவின் இந்த கருத்துக்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக பியூஸ் கோயல் பேசுகையில், கடந்த 75 ஆண்டுக் கால நாடாளுமன்ற ஜனநாயகத்தில், ஒரு சில அரசியல் கட்சிகளைத் தவிர அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை முறையாகப் பின்பற்றுகின்றன.
ஆனால், ஒரு சில உறுப்பினர்கள் மட்டுமே அற்ப அரசியல் செய்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் விவாதத்தின் தரத்தைக் குறைக்கும் என்று வருத்தம் தெரிவித்தார்.மேலும், நமது நாட்டை கண்டித்து ஐரோப்பா நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிக் குறித்து, நமது நாடாளுமன்றத்தில் பேசுவது எந்த வகையில் நியாயம்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.இதனைத்தொடர்ந்து இன்றும் சிக்கியுள்ளார், ஜாதி ரீதியிலான பேச்சு, சனாதனம் பேச்சு உள்ளிட்ட சர்ச்சையில் ஆ.ராசா தொடர்ந்து வரும் நிலையில் இன்று மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இன்றைய மக்களவை கூட்டத்தில் ஆ.ராசா பேசும்போது 'சந்திரயான் திட்டத்தில் திட்ட இயக்குனர்களாக பணியாற்றிய அனைவரும் தமிழர்கள், மயில்சாமி அண்ணாதுரை, சிவன், முத்துவேல் அனைவரும் ஓபிசி வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும் பேசி இஸ்ரோவில் சாதித்தவர்களை சாதி குறித்து பேசினார்.
மேலும் பேசிய அவர், 'சந்திரயான் திட்டத்தில் தமிழர்களின் பங்கு அளப்பரியது. இதற்கு பெருமைப்படுகிறோம், சந்திரயான் திட்டத்தில் பணியாற்றிய தமிழர்கள் அரசு பள்ளிகளில் படித்தவர்கள். இஸ்ரோவில் சாதித்த தமிழர்களுக்கு சமஸ்கிருதமோ, இந்தியோ தெரியாது. சந்திரயான் திட்டத்தில் பணியாற்றிய தமிழர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரியும்என வழக்கமான தனது மொழி அரசியலை பேசினார். மீண்டும் பேசிய அவர், 'இந்த நாடு தனிமனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல என்றும் சந்திரன் குறித்த பாரதியின் கூற்று இன்று மெய்யாகி உள்ளது. 2,500 ஆண்டுகளுக்கு முன்பே பஞ்சபூதங்கள் பற்றி தமிழ் புலவர்கள் கூறியுள்ளனர். தமிழ் இலக்கியங்களில் அறிவியல் கருத்துகளுக்கு எதிரான விஷயங்களை பார்க்க முடியாது' எனவும் பேசினார்.
இப்படி தொடர்ந்து சம்மந்தம் சம்மந்தம் இல்லாத விஷயங்களை பேசிவந்த ஆ.ராசாவை பொறுமையிழந்து பார்த்தனர் வட மாநில எம்.பிக்கள், இதனை தொடர்ந்து ஆ.ராசா பேச முற்படும்போது சில எம்.பி'க்கள் குறுக்கிட்டனர். உடனே அவருக்கு பின்னர் அமர்ந்திருந்த எம்.பி தயாநிதிமாறன் ஆவேசமாக பேசுகிறேன் என்ற பெயரில் “உட்கார்ரா... உதை வாங்கப் போற” என மக்களவையில் அத்துமீறி பேசி ஆண்டிமுத்து ராசாவை கோர்த்துவிட்டுள்ளார்.ஏற்கனவே பியூஸ் கோயல் கோபத்திற்கு ஆளான அடுத்த நாளே ஆ.ராசா வை தயாநிதி மாறன் வக்காலத்து வாங்குகிறேன் என்ற பெயரில் வசமாக கோர்த்துவிட்டுள்ளார்.ஏற்கனவே 2 ஜி விவகாரம் போன்ற சர்ச்சையில் சிக்கி எப்போது வேண்டுமானாலும் வழக்கு நடவடிக்கைகள் பாயலாம் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என இருந்து வரும் நிலையில் நைசாக உசுப்பேத்தி விட்டு பின்னர் 'உட்கார்றா உதை வாங்கப் போற...' என மக்களவையில் பேசி ஆ.ராசா விற்கு இன்னும் அதிகமான சர்ச்சையை இழுத்து விட்டுள்ளார் தயாநிதிமாறன் என இப்பொழுது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும் சபாநாயகர் இது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் அறிவிக்கவில்லை முறையாக பார்த்தால் இதெல்லாம் நாடாளுமன்ற வரைமுறைகளில் கிடையாது, இது போன்று மக்களவையில் நடந்து கொள்ள கூடாது, அப்படி நடந்து கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை பாயலாம். இன்னும் சில காலங்களில் தேர்தலை சந்திக்கவிருக்கும் நிலையில் இப்படியா சிக்குவார் ஆண்டிமுத்து ராசா இப்படி சிக்க வைப்பார் தயாநிதி மாறன் என இப்பொழுது விமர்சனங்கள் எழுந்துள்ளன.