24 special

சீமான் விவகாரத்தின் பின்னணியில் நடக்கும் சதி வேலைகள்...! கசிந்த பரபர தகவல்...!

seeman vijayalakshmi
seeman vijayalakshmi

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி சென்னை மாநகர காவல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ள செய்தி வெளியாகி பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகை விஜயலட்சுமி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 2008இல் சீமானின் உறவினர்கள் நண்பர்கள் முன்பாக எங்களுக்கு மாலை மாற்றி திருமணம் நடைபெற்றது. பெரியார் வழியை பின்பற்றுவதாலும் கிறிஸ்தவர் என்பதாலும் தாலி கட்ட மாட்டேன் என்று கூறிய சீமான் பிறகு பிரபாகரன் முன்னிலையில் திருமணம் நடைபெறும் வரை இது குறித்து வெளியில் கூற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் அதற்குப் பிறகும் ஏழு முறை எனது உடன்பாடு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து பிறரை கயல்விழி என்ற பெண்ணை திருமணம் செய்து என்னை ஏமாற்றி விட்டார், ஆனால் சீமானின் தூண்டுதலின் பெயரில் தற்பொழுது  கொலை மிரட்டல் வருகிறது. ஆதலால் எனக்கு பாதுகாப்பு வேண்டுமென்று பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கண்ணீர் மல்க பதில் அளித்தார்.


பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜயலட்சுமி தன் கருத்தை தெரிவிக்கும் போது வீரலட்சுமி என்பவர் உடன் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. புகார் அளித்ததை அடுத்து வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த விசாரணைக்காக சீமானை காவல் நிலையத்தில் ஆஜர் படுத்தினார். பிறகு நடிகை விஜயலட்சுமி கொடுத்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். மேலும் அந்த மனுவில் விஜயலட்சுமிக்கும் தனக்கும் இருந்தது ஆரோக்கியமான உறவு தான் என்றும் அது குறித்து தனது நெருங்கியவர்களுக்கும் தனது குடும்பத்தினருக்கும் தெரியும் என்றும் தவறாக தற்பொழுது விஜயலட்சுமி புகார் கூறியுள்ளார் அவர் கூறும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை இதற்கு முன்பு 2011 ஆம் ஆண்டிலும் ஆதாரங்கள் இல்லை என்பதால் வளசரவாக்க காவல் நிலையத்தால் முடித்து வைக்கப்பட்ட ஒரு காலத்தில் மறுபடியும் தொடர்கிறார் ஆதலால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். 

இந்த நிலையில், மூத்த வழக்கறிஞர் தடா சந்திரசேகரனின் படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு மேடையில் பேசிய சீமான் மனைவி கண் கலங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மேடையில் பேசி பழக்கம் இல்லை ஆனால் மூத்தவரை பற்றி பேசி தான் ஆகவேண்டும், எனது மாமா என்னை மறைமுகமாக பெண் பார்த்ததும், எங்களது திருமணத்தில் அவர் மிகவும் உறுதியாக இருந்தார். திருமணத்தின் ஆரம்ப காலத்தில் சண்டைகள் வரும் பொழுது எங்கள் இரண்டு பேரையும் வைத்து சமாதானம் பேசும் பொழுது, சீமானிடம் தற்போது கல்யாணம் ஆயிடுச்சு அதனால பொறுமையா தான் இருக்கும் என்றும் என்னிடம் பேசும் பொழுது தம்பி ரொம்ப நல்ல பையன் பா என்று தான் கூறினார். சமீபழக்கமாக நாம் தமிழர் கட்சி குறிப்பாக சீமானை குறிவைத்து இதுபோன்ற பிரச்சனைகள் எழுப்பப்பட்டு வருவதும், தினம் ஒரு வீடியோ, தினம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு என நடந்து பேசப்பட்டு வருவதும் அதிகமாகியுள்ளது.

ஏன் இப்படி நடக்கிறது என சில அரசியல் விமர்சர்களிடம் பேசிய பொழுது இதற்குப் பின்னணிகள் நாம் தமிழர் கட்சியினரே இருக்கின்றனர் எனவும் நாம் தமிழர் கட்சியினர் ஏதாவது ஒரு வகையில் ஊடகத்தில் பெயர் வர வேண்டும், ஊடகத்தில் சீமானின் பெயர் தினமும் அடிபட வேண்டும் என அவ்வப்போது இதுபோன்ற வீடியோக்கள், விளம்பரங்களை செய்து வருவதையும் சுட்டிக்காட்டினர்.மேலும் அந்த அரசியல் விமர்சகர்கள் கூறியது போல் தான் இருக்கிறது கடந்த 15 நாட்களாக தினமும் ஏதேனும் ஒரு வகையில் சீமானின் பெயர் ஊடகங்களில் அடிபட்டு வருகிறது. ஆனால் சீமான் தரப்பிலோ இது ஆளுங்கட்சியின் சதி வேலைதான், சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருவதை பிடிக்காமல் ஆளும் கட்சி தரப்பிலிருந்து இப்படி செய்கின்றனர் எனக் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.