தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக குறிப்பாக கூற வேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று வந்ததற்கு பிறகு அதிமுக பாஜக கூட்டணி இருக்கிறதா இல்லையா என்பது போன்ற அரசியல் ரீதியான சலசலப்பு ஏற்பட்டது. அதிமுகவில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் அண்ணாமலையை பற்றி பேசுவதும், பாஜகவில் உள்ளவர்கள் அதற்கு எதிர்வினை ஆற்றுவதும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்றி வந்தன. இது போதாது என்று திமுக தரப்பிலிருந்து வேறு அதிமுக பாஜக கூட்டணி என்பது இருக்காது, அவர்கள் பிரிந்து சென்று விடுவார்கள், விளையாட்டு செய்திகள் இத்துடன் முடிவடைந்தது என்பது போன்ற கருத்துக்களை எல்லாம் வேறு கூறி வந்தனர்.
இந்த நிலை நீடிக்கும் பொழுது எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து அண்ணாமலையை நீக்கினால் கூட்டணி என்கின்ற ரீதியில் டெல்லியில் கோரிக்கை விடுத்ததாகவும் அதற்கு ஒரே பதிலடியாக டெல்லி தலைமை 'எங்களுக்கு அண்ணாமலை தான் முக்கியம்' என பதிலடி கொடுத்ததால் வேறு எதுவும் செய்ய முடியாமல் அதிமுக பாஜக கூட்டணி தொடர்கிறது என எடப்பாடி தரப்பு அறிவித்தது. இந்த விவகாரம் அண்ணாமலையின் காதுகளுக்கு வரவே அண்ணாமலை 'என்னையே மாற்ற வேண்டும் என பேசுபவர்களை நான் எப்படி மதிக்க முடியும்?' என்கின்ற ரீதியில் இருந்ததாகவும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் இன்று முதல் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை மூன்றாவது கட்டமாக துவங்க இருக்கிறது, அதற்காக கோவைக்கு வந்திருந்த அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர் 'அதிமுக பாஜக கூட்டணி முடிந்தது என யாருமே சொல்லவில்லை, அவ்வப்போது சில பேச்சுக்கள் எழுகின்றன தவிர இதற்காக கூட்டணி முடிவு என்பதெல்லாம் கிடையாது' என தெளிவுபட கூற கூறினார்.
அதன் பிறகு செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுது அண்ணாமலை 'செல்லூர் ராஜு கூடத்தான் கூறுகிறார் இந்தியாவிற்கு மோடி, தமிழகத்திற்கு எடப்பாடி என எடப்பாடி தமிழகத்திற்கு முதல்வர் என எப்படி நான் ஒப்புக்கொள்ள முடியும் எங்களுக்கென ஒரு கட்சி இருக்கிறது! எங்களுக்கு என்ன ஒரு தலைமை இருக்கிறது! அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டு அதைத்தான் நான் முடிவு எடுக்க முடியும். அதை விடுத்து விட்டு நானே எப்படி எடப்பாடி முதல்வர் என ஒப்புக்கொள்ள முடியும்?' என கேட்டது எடப்பாடி முகாமை இடி விழுந்தது போல் ஆக்கிவிட்டது. இதனால் வரை கூட்டணியில் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் சென்று விடுங்கள் என்கின்ற ரீதியில் பாஜகவை டீல் செய்து வந்தோம் ஆனால் இன்று அண்ணாமலை நான் சொன்னது தான் சரி, நான் அப்படித்தான் சொல்லுவேன், அண்ணாதுரை பற்றி சொன்னது மன்னிப்பு கேட்க முடியாது என பிடிவாதமாக இருக்கிறார்.
பிடிவாதமாக இருப்பது மட்டுமில்லாமல் எடப்பாடி முதல்வர் எப்படி நான் ஒப்புக்கொள்ள முடியும் என இருக்கிறார், இதன் பின்னணியில் டெல்லி கொடுக்கும் தைரியம் தான் இருக்கிறது வேறு என்ன நாம் செய்ய முடியும் இப்போதைக்கு இருக்கும் நிலையில் அதிமுக என்ற கட்சி திமுகவை எதிர்க்க பாஜகவின் துணை தேவை எனவே பொறுத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும் என எடப்பாடி முகாம் கப்சிப் என ஆகிவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.மேலும் அண்ணாமலையை மாற்றவேண்டும் என கூறினால் டெல்லி கேட்கும் என நினைத்து வேறு நடக்கவில்லை என்பதால் அண்ணாமலை வேறு மாதிரியான ஆள் எனவும் எடப்பாடி தரப்பு புலம்பி வருவதாக சில செய்திகள் கசிந்துள்ளன.....