24 special

செந்தில் பாலாஜி வரிசையில் சேரப்போகும் தயாநிதி மாறன்.... நான்கு வருடங்களுக்குப் பிறகு விஸ்வரூபம் எடுத்த வழக்கு!!

Senthil Balaji's
Senthil Balaji's

திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் ஆகவும் மத்திய சென்னை மக்களவை உறுப்பினராகவும் உள்ள தயாநிதிமாறன் இரண்டு முறை மத்திய அமைச்சர் பதவியை பெற்றவர். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுது அப்போதைய தலைமைச் செயலாளர் சண்முகத்தை நேரில் சந்திக்க சென்றுள்ளார். இவருடன் டி ஆர் பாலு, கலாநிதி வீராச்சாமி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய திமுக எம்பி களும் உடன் சென்றிருந்தனர். இந்த சந்திப்பில் தலைமைச் செயலாளர் சண்முகம் தங்களை அவ மரியாதையுடன் நடத்தியதாக திமுக எம்பிகள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதுமட்டுமின்றி" தி ஸ்த்த பிராப்ளம் வித் யூ பீப்பிள் " என்று சண்முகம் எங்களை பார்த்து கேட்டார் என டி.ஆர்.பாலு கூற இதற்கு என்ன அர்த்தம் தயா? என்று டி ஆர் பாலு தயாநிதிமாறனிடம் கேட்க, தயாநிதி மாறன் எங்களை மூன்றாம் தர மக்களை போன்று அவர் நடத்தினார் நாங்கள் எல்லாம் என்ன தாழ்த்தப்பட்டவரா? என்று தயாநிதி மாறன் கொந்தளித்து பேசி இருந்தார். 


இதற்கு சமூக வலைதளங்கள் மட்டுமின்றி அவர்களின் கூட்டணி கட்சியாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியிதமிருந்தும் எதிர்ப்புகள் கிடைத்தது. மேலும் அவமரியாதியாக நடத்தினார் என்று நீங்கள் கூறலாம் அவமரியாதையாக நடத்துவதும் நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா என்று நீங்கள் கூறுவதற்கும் வித்தியாசம் இருக்க வேண்டும் தாழ்த்தப்பட்டவர் என்றால் அவமரியாதை என்பதன் பொருளாகுமா? என பல வகையில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இதனை அடுத்து தயாநிதி மாறன் அன்று மாலையே, தலைமைச் செயலாளர் திமுக எம்பி களை தாழ்வான முறையில் நடத்தினார் என்ற அர்த்தத்தில் தான் நான் கூறியிருந்தேன் அதை தவிர யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு சிறிதும் கிடையாது யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் தயாநிதி மாறன். 

இருப்பினும் கோயம்புத்தூர் சிஎம்சி காலனியை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் காவல் நிலையத்தில் தயாநிதி மாறன் மீது புகார் அளித்தார். அந்த புகாரில் தாழ்த்தப்பட்ட மக்களை எம்பி தயாநிதி மாறன் இழிவு படுத்தியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும் இந்த புகாரின் அடிப்படையில் எம்பி தயாநிதி மாறன் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கோயம்பத்தூர் பி.3 காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் இந்த வழக்கு மீதான விசாரணை அதிரடியாகவும் உடனடியாகவும் எடுக்கப்படவில்லை, கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது., இந்த நிலையில் தற்போது தயாநிதி மாறன் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்கு நடந்த சம்பவம் சென்னை என்பதால் தற்போது இந்த வழக்கின் விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றபட்டுள்ளது. 

கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக இப்படி ஒரு வழக்கு தயாநிதி மாறன் மீது இருக்கிறதா என்பதை பலரும் மறந்திருந்த நிலையில் தற்போது இந்த வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது தயாநிதி மாறனை மட்டுமின்றி ஒட்டு மொத்த அறிவாலயத்தையுமே  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் ஏற்கனவே செந்தில் பாலாஜி வழக்கில் சிக்கி இதுவரை ஜாமினில் கூட வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதோடு அமைச்சர் பொன்மூடியும் தற்போது தான் வழக்கிலிருந்து விடுபட்டு உள்ளார் இந்த நிலையில் பழைய வழக்கொன்று தயாநிதி மாறன் மீது தீவிரமாக முளைத்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த வழக்கு மீதான விசாரணைக்காக தயாநிதி எம்பி விரைவில் ஆஜராக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.