24 special

சிக்கிய கருப்பு ஆடு... சாட்டையை சுழற்ற போகும் ஸ்டாலின்... துறை உதயநிதி கா?

udhayanistalin
udhayanistalin

திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்று ஒட்டுமொத்த தமிழகத்தையுமே அதிர வைத்து மக்களையும் பெரும் திண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது என்றால், திமுகவையே திண்டாட்டத்தில் ஆழ்த்தி வந்தவர் அரசியல் விமர்சகரும் யூடியூப்பருமான சவுக்கு சங்கர்! திமுகவுடனான பகையுடன் அக்கட்சியில் இருந்து வெளியேறிய சவுக்கு சங்கர், திமுக தன் ஆட்சியில் செய்யும் ஒவ்வொரு குளறுபடிகளையும் ஊழலையும் ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்தார்.


அதுமட்டுமின்றி அமைச்சரவைக்குள் நடக்கும் பிரச்சனைகள் திமுக அமைச்சர்கள் மறைமுகமாக மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்கள், சுற்றுப்பயணங்கள் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் போன்ற அனைத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு அறிவாலய தலைமையை ஆட்டம்கான வைத்து வந்தார். இதனால் திமுக தன் கட்சிக்குள்ளேயே யாரை நம்புவது யாரை நம்பாமல் இருப்பது என்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டது. ஏனென்றால் சவுக்கு சங்கர் வெளியிடும் ஒவ்வொரு தகவல்களுமே திமுகவின் முக்கிய மற்றும் டாப் நிர்வாகிகளுக்கு மட்டுமே தெரிந்தது அப்படிப்பட்ட தகவல்களை இவர் எப்படி வெளியே விடுகிறார் ஆக இவருக்கு தகவல் கூறும் ஒரு கருப்பு ஆடு இங்கு இருக்கிறது என்று முதல்வர் கணக்கு போட ஆரம்பித்து யார் அந்த கருப்பு ஆடு என்ற ஒரு தீவிர தேடும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் காவலரை சவுக்கு சங்கர் அவதூறாக பேசியதாக தொடுக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து தொடர்ச்சியாக பல வழக்குகள் அவர் மீது சுமத்தப்பட்டது. அதாவது அவர் தங்கியிருந்த விடுதியில் கஞ்சா இருந்ததாகவும் செய்திகளில் வெளியானது. அதுமட்டுமின்றி கஞ்சா வழக்கை காரணம் காட்டி போலீசார் சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகங்களின் மேற்கொண்ட சோதனையின் மூலம்  லட்சக்கணக்கான பணங்கள் கைக்கு புரண்டதாகவும் அதன் மூலம் அவர் பெரிய அளவிலான வீடு வாங்கியதும்,  சவுக்கு சங்கரின் லேப்டாப் மொபைல் போன் மற்றும் பல பென்டிரைவுகள் போலீஸ் வசம் சிக்கியதாகவும் அவற்றில் பல ஆதாரங்கள் இருப்பதாக கூறப்பட்டது. அதிலும் குறிப்பாக இதுவரை திமுகவில் ரகசியங்களை சவுக்கு சங்கரிடம் கூறிய ஒருவரின் ஆடியோவும் அந்த ஆதாரத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதற்கிடையே சவுக்கு சங்கர் காவல்துறை எஸ் பி ஆன லாவண்யாவுடன் பேசிய ஆடியோ சமீபத்தில் வெளியானது அந்த ஆடியோவில், காவல்துறையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து சவுக்கு சங்கரிடம் அவர் தெரிவித்திருந்தார். அதன்படியே திமுகவின் ரகசிய தகவல்களை திமுகவின் முக்கிய மற்றும் மூத்த நிர்வாகி சவுக்கு சங்கரிடம் கூறும் ஆடியோவும் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது அந்த ஆடியோவை காவல்துறை முதல்வரிடம் ஒப்படைத்ததாகவும், இந்த ஆடியோவை போன்று மதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரபலங்கள் சவுக்கு சங்கருடன் பேசும் ஆடியோவும் முதல்வரிடம் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ஒட்டுமொத்த அறிவாலய தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது அதுமட்டுமின்றி அந்த ஆடியோவில் பேசியது யார் என்பது முதல்வர் அறிந்து இனி திமுகவை நிர்வாகிகள் மற்றும் கட்சிக்குள்ளே கருப்பு ஆடாக திரிந்தவர்கள் மீது அவர் நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ள முக்கிய திமுக நிர்வாகி யார் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. அவர் கட்சிகளின் பஞ்சாயத்தை கவனித்து வந்த அமைச்சர் எனவும் அவர் 2026 தேர்தலை திட்டமிடும் குழுவில் உதயநிதியுடன் அவரையும் முதல்வர் நியமித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதாவது அந்த அமைச்சர் கே என் நேரு என்றும் அவர் மீது திமுக நடவடிக்கை மேற்கொண்டால் அவரது துறை உதயநிதிக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.