24 special

மோடியை விமர்சிப்பதாக நினைத்து அனைத்தையும் உளறிய தயாநிதி...!

pm modi, dayayanithi
pm modi, dayayanithi

சிறப்பு நாடாளுமன்ற கூட்ட தொடர் அறிவிக்கப்பட்டது யாருக்கு பயத்தை உண்டாக்யதோ இல்லையோ திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடும் உதரலை உண்டாக்கி இருக்கிறது அதிலும் குறிப்பாக தயாநிதி மாறன் அளித்த பேட்டியின் மூலம் மொத்த திமுகவின் குமுறலும் வெளிவந்து இருக்கிறது.முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தி.மு.க தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.லீக் முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியின் இறுதி போட்டியை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறான் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தயாநிதி மாறன் தெரிவித்த கருத்து தான் தற்போது பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது,செய்தியாளர்கள் முன் ஆவேசமாக பேசிய தயாநிதி மாறன் அவசர கதியில் பாராளுமன்றத்தை கூட்டுகிறார்கள்.


ஆகஸ்ட் மாதத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவே இல்லை. மணிப்பூர் விவகாரம் குறித்து பேச மறுக்கிறார். வெளி நாடுகளுக்கு செல்லும் பிரதமர் இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டும் போது எதற்காக நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும் ஆனால் இதுவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது என்கிறார்கள் அதுவும் ஏன் என தெரியவில்லை.ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளார்கள். அந்த குழுவில் தென்னிந்தியாவை சேர்ந்த எந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் இடம்பெறவில்லை, அதே போல தேர்தல் ஆணையத்தை சேர்ந்த அதிகாரிகள் யாரும் இல்லை. முதல் முறையாக பதவியிலிருந்து சென்ற குடியரசு தலைவரை ஒரு குழுவின் தலைவராக நியமித்துள்ளார்கள் அதுவும் ஏன் என தெரியவில்லை.

மோடியின் கூட்டணியில் சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை தான் இருக்கிறார்கள்.  நாட்டில் முக்கிய பிரச்சனை இருக்கும் போது மக்களை அதிலிருந்து திசை திருப்பி தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி அவர்களின் தவறை மறைப்பது தான் மோடியின் வேலை என செய்தியாளர் முன்னிலையில் கொட்டி தீர்த்தார் தயாநிதி.தயாநிதி மாறன் மோடியை விமர்சனம் செய்வதாக கூறி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட ஏன்  சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டுகிறார்கள் என தெரியவில்லை என பேசியதன் மூலம் சிறப்பு கூட்டம் மூலம் மிக பெரிய பின் விளைவுகள் இருக்குமோ என ஒட்டு மொத்த திமுகவினரும் பயத்தில் இருப்பது கண் கூடாக தெரிய தொடங்கி இருக்கிறது.