24 special

சிக்கிய அடுத்த முக்கிய திமுக அமைச்சர் பதவி நீடிக்குமா...?

mk stalin, senjimasthan
mk stalin, senjimasthan

அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளராகவும் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில் அமைச்சர்  மஸ்தான் மருமகன் ரிஷ்வான் திண்டிவனம் நகராட்சியில் செய்த சில விதிகளை மீறிய செயல்களால் 13 திமுக கவுன்சிலர்கள் பதவியை ராஜினாமா செய்த போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் திமுக அமைச்சர் மஸ்தான் மற்றும் அவரது மருமகன் தான் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்கள் இடையே எழுந்துள்ளது. மேலும் திண்டிவனம் மாவட்டம் செஞ்சி மற்றும் மயிலம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய நிலையில் அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து செஞ்சி மஸ்தான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன எனவும் தகவல் கிடைத்துள்ளது.


இது மட்டுமல்லாமல் பதவியை கையில் வைத்துக்கொண்டு கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது தனது உறவினர்கள் மற்றும் தனது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே பொறுப்புக்களை வழங்கியதுடன்  வேறு கட்சியிலிருந்து புதிதாக திமுகவில் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் அரசியல் மத்தியில் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இது மட்டுமல்லாமல் சாராய வியாபாரியான ராஜா என்பவர் உடன் மஸ்தான் மிகவும் நெருங்கி பழகி வருவதாலும் அது தொடர்புடைய புகைப்படங்கள் வெளிவந்ததாலும் தற்போது சர்ச்சையை கிளப்பிய நிலையில் செஞ்சி மஸ்தானின் செயல்பாடுகள் எதுவும் பிடிக்காத காரணத்தினால் திண்டிவனம் நகராட்சியின் செயல்பாடுகளையும் அவர் சரிவர கவனிக்காமல் இருந்து வருகிறார் என்ற புகார்களும் எழுந்த நிலையில் 13 கவுன்சிலர்கள் இதனை கண்டித்து முதலமைச்சருக்கு புகார் எழுதியுள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது

இந்நிலையில் திண்டிவனம் மாவட்டத்தில் நகர மன்ற கூட்டம் நடைபெற்ற போது கவுன்சிலர்கள் அனைவரும் கருப்பு துணியை கட்டிக் கொண்டு வந்து செஞ்சி மஸ்தானுக்கு எதிராக அதிர்ச்சி அளித்தனர் மேலும் கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளுக்கு எந்த வசதியும் செய்யவில்லை இதனால் பொதுமக்கள் கேள்விகளை எழுப்ப ஆரம்பித்து விட்டனர் பொதுமக்கள் மத்தியில் எங்களுக்கு அவமானமாக உள்ளது என்றும்  திமுக கட்சியில் இருந்து கொண்டு முதல்வருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக செஞ்சி மஸ்தான் செயல்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் கவுன்சிலர்கள் தெரிவித்ததோடு 13 கவுன்சிலர்கள் கையொப்பமிட்ட ராஜினாமா கடிதத்தை வெளியிட்டு அதிர்ச்சி அளித்ததுடன் கூட்டத்திலிருந்து வெளியேறினர் மேலும் அந்த கடிதத்தை முதல்வரிடம் கொடுக்கப் போகிறோம் என்று கூறியதால் செஞ்சி மஸ்தான் தற்போது பதவி பறிபோய் விடுமோ என்ற பயத்தில் இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மட்டுமில்லாமல் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திண்டிவனம் கவுன்சிலர்கள் செஞ்சி மஸ்தான் பதவிக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் நகராட்சிக்கும் வார்டுகளுக்கும் எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என்றும் நாங்கள் எதையாவது கேட்டால் என் மருமகனிடம் கேளுங்கள் என்று மழுப்பி பேசுகிறார் இது மட்டும் அல்லாமல் செஞ்சி மஸ்தானின் மருமகன் ரிஸ்வான் தலையீடு தான் திண்டிவனம் நகராட்சியில் அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளனர் இவ்வாறு குடும்ப உறுப்பினர்களே திண்டிவனத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்து வருவதால் கவுன்சிலர்கள் குமரிக் கொண்டிருக்கின்றனர் மேலும் இதை முதல்வரிடம் கொண்டு செல்லும் பட்சத்தில் திமுக தலைமை தகுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

மேலும் ஆவடி நாசர் பதவி பறிபோனது அதற்கு காரணம் அவருடைய மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆவடி நாசர் மகன் செஞ்சி மஸ்தான் மருமகனைப் போலவே தொகுதியில் அடாவடி செய்த காரணத்தினால் திமுக தலைமைக்கு தகவல் பரிந்து நிலையில் அவர்களுடைய பதவி பதிக்க பறிக்கப்பட்டது அதுபோலவே செஞ்சி மஸ்தான் பதவியும் தற்போது பறிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக அறிவாலய  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.