24 special

சொதப்பிய மும்பை மாநாடு....! மொத்தமும் போன கடுப்பில் மாநில கட்சிகள்....!

pmmodi, rogulgandhi
pmmodi, rogulgandhi

இதுவரையில் இப்படி ஒரு அரசியல் களத்தை கண்டிராத அரசியல் காலமாக 2024 ஆம் ஆண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது ஏனென்றால் ஒரு கட்சியை எதிர்த்து நாட்டில் இருக்கும் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவது இதுவே முதல் முறையாகும் என இப்பொழுதே அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த எதிர்க்கட்சி கூட்டத்தின் மூன்றாவது மாநாடு மும்பையில் இரண்டு தினங்கள் நடைபெற்றது இந்த கூட்டத்தில் என்னென்ன விவாதங்கள் முன்வைக்கப்பட்டது என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த மாநாட்டிலாவது கூட்டத்தின் லோகோ மற்றும் புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அறிவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியலில் இருந்தது இருப்பினும் அதற்கான எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை.


ஆனால் இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்காக 28 கட்சிகளும் ஒன்றிணைந்து பொது வேட்பாளர்களை நியமிக்க உள்ளதாகவும் அதற்கான தொகுதி பங்கீடுகள் பற்றிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் தேர்தல் பற்றிய ஆலோசனைகளை மேற்கொள்வதற்கும் முடிவுகளை எடுப்பதற்கும் 13 பேர் கொண்ட கமிட்டியை இந்த மாநாடு நியமித்துள்ளதாகவும் அதில் வேணுகோபால், சரத் பவார், டி ஆர் பாலு, அபிஷேக் பானர்ஜி, ஹோமர் அப்துல்லா, சஞ்சய் ராவத் உள்ளிட்ட 14 பேர் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்தனர், எதிர்க்கட்சிகள் இப்படி இணைந்து போட்டியிடுவதால் பாஜகவால் அடுத்த தேர்தலில் ஆட்சி அமைக்க முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்தார். இருப்பினும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளாமல் புறப்பட்டு சென்றதும் ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் தங்களது உரைகளை முடித்துவிட்டு உடனடியாக புறப்பட்டு சென்றதும் பத்திரிகையாளர்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் சார்பாக சென்ற முதல்வர் மு க ஸ்டாலின் தனது உரையை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முன்வைத்த பிறகு டி ஆர் பாலுடன் உடனடியாக புறப்பட்டு சென்றது ஏதேனும் அதிருப்தி நிலவி இருக்கிறது இந்த கூட்டத்தில் அதனாலதான் இப்படி நடந்துள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளரை பற்றியோ! இந்திய கூட்டணியின் அமைப்பு குறித்து கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்றும் தேர்தலைப் பற்றியும் தேர்தலை எப்படி எதிர்கொள்வது பற்றிய கருத்துக்களே கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த மாநாட்டை கலந்து கொள்வதற்கு முன்பாக ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவர்களின் எதிர்பார்ப்பாக பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு இருந்தது. இருதாலும் யார் வேட்பாளர் அறிவிக்க போறாங்க நம் வந்து அறிவிக்கலாம் என நினைத்து சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கும் ஏமாற்றமே மிஞ்சியதாக கூறப்படுகிறது.

 இந்த கூட்டத்தில் இப்போதைக்கு 14 பேர் கொண்ட குழுவை அமைக்கலாம் அவர்கள் முடிவு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டது பல மாநில கட்சிகள் குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால்,  ஆம் ஆத்மி மற்றும்  திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஏமாற்றத்தை அளித்து என கூறப்படுகிறது.  ஏனெனில் அரவிந்த் கெஜ்ரிவால் தான் பிரதமராக வேண்டுமென ஆசையில் இருப்பதாகவும் இடையில் மம்தா பானர்ஜி வேறு நான் தான் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என ஆசையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நான் தான் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பேன் என ஆசையில் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு ஏமாற்றமே மிஞ்சியது இப்படி யார் பிரதமர் வேட்பாளர் என தெரியாமல் கூட்டம் முடிகிறது என கடுப்பு அங்கிருந்து மாநில கட்சிகள் கலைந்து சென்றதாகவும் அடுத்த கூட்டத்திற்கு இனிமேல் வரவேற்பு இருக்காது அடுத்த கூட்டத்தை வந்து கூட்டினாலும் எதுவும் பிரயோஜனமில்லை நம் மாநிலத்தில் உள்ள வேலைகளை பார்க்கலாம் என ஒவ்வொரு மாநில கட்சிகளும் தற்போது முடிவெடுத்து அதிருப்தியில் திரும்பியதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன