24 special

சித்ராவுக்கு ஆதரவாக இறங்கிய டெல்லி வெடிக்கப் போகும் பெரிய விஷயம்!

chithra, modi
chithra, modi

வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவோடு திறக்கப்பட உள்ளது. பல ஆண்டுகளாக பல இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மற்றும் எதிர்பார்ப்பு அனைத்தும் தற்போது நிறைவேற உள்ளது இதற்கான முயற்சியை மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்டுள்ளது என்பது மக்கள் மத்தியிலும் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் நாட்டின் பல முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர்களுக்கு ராமர் கோவிலின் கும்பாபிஷேக அழைப்பிதழ்களும் வழங்கப்பட்டு வருவதாக ராமர் கோவிலின் அறக்கட்டளை சார்பில் செய்திகள் வெளியானது. அதுமட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடி இராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவில் ராமரை பிரதிஷ்டை செய்ய உள்ளார் என்றும் அதற்கான விரத முறைகளை பிரதமர் மோடி தற்பொழுது மேற்கொண்டு வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் ராமர் பிரதிஷ்டை செய்யப்படும் நாள் அன்று அனைவரும் தங்களது இல்லத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பின் மூலம் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவை காணலாம் என தெரிவித்ததோடு அன்றைய தினம் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள் என்றும் வலியுறுத்தி இருந்தார். 


அதுமட்டுமின்றி நாட்டின் பல அரசியல் பிரமுகர்களும் திரை உலக நட்சத்திரங்களும் ராமர் கோவிலுக்கு அதிக வரவேற்பையும் கொடுத்து வருகின்றனர். அந்த நிலையில் தேசிய விருது பெற்றுள்ள பின்னணி பாடகியான சின்ன குயில் சித்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான ஜனவரி 22ஆம் தேதி அன்று நண்பகல் 12:20 மணியளவில் ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமன் என்னும் ராமரின் மந்திரத்தை உச்சரித்து வழிபடுங்கள் மேலும் அன்று மாலை  5 முக விளக்குகளை வீட்டில் ஏற்றி ராமரின் நல்லாசியை பெறுங்கள் என கூறினார். சின்னக்குயில் சித்ராவின் இந்த வீடியோவிற்கு பல தரப்பில் இருந்து பலவிதமான கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளது. சிலர் இவரின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்தும் சிலர் எதிர்ப்பை தெரிவித்தும் விமர்சனம் செய்து வருகின்றனர். அதாவது சின்ன குயில் சித்ரா அரசியல் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் என ஒரு சில விமர்சனங்களும் ராமரின் மந்திரத்தை கூற சொன்னது தவறா என்று மற்ற சில தரப்பினரும் இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

இந்த வரிசையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தன்று ராம நாமத்தை ஜெபித்து வீட்டில் விளக்கு ஏற்றுங்கள் என்று கூறியது ஒரு குற்றமா? அல்லது கேரளாவில் உள்ளவர்கள் ராம நாமத்தில் ஜெபிப்பது குற்றமா? என்று சின்ன குயில் சித்ராவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். மேலும் பாஜக தரப்பிலும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டும் என்ற தகவல்கள் கசிந்த நிலையில், தேசிய மகளிர் நல ஆணைய உறுப்பினரும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சகிப்புத்தன்மையின்மை உச்சத்தில் இருக்கிறதாகவும் அவர்களால் மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க முடியாது அதற்கென்று தைரியம் வேண்டும்! அதனால் நான் முழுமையாக சித்ராவுடன் ஒற்றுமையுடன் ஆதரவாக நிற்கிறேன் என தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படி சித்ரா தனது கருத்தை தெரிவித்ததற்கு விமர்சனங்களை பெற்ற விவகாரம் தேசிய மகளிர் ஆணையம் வரை சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.