
இந்திய அரசியலமைப்பின் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 370 வது சட்டப்பிரிவு ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. பெயரளவிலே இந்த சட்டத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து என்று குறிக்கப்பட்டாலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுவதுமாக ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாது! இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைப் போல ஜம்மு காஷ்மீர் நடத்தப்படுவது அல்ல! ஜம்மு காஷ்மீருக்கு என்று தனி அரசியல் அமைப்பு உள்ளது. ஆனால் ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பின் எந்த ஒரு பகுதியையும் மாநிலத்திற்கு பொருந்தக்கூடிய வகையில் மாற்றி அமைக்கும் அதிகாரம் இந்திய குடியரசு தலைவருக்கு இருந்தது அதிலும் அந்த மாற்றத்திற்கு மாநில அரசின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டது. மேலும் இந்திய நாடாளுமன்றத்தின் வெளி விவகாரங்கள் பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு ஆகிய மூன்று துறைகள் மட்டுமே ஜம்மு காஷ்மீரின் சட்டங்களில் திருத்தம் செய்யலாம் என்றும் இந்த சிறப்பு அந்தஸ்து கூறியது. அதுமட்டுமின்றி நாட்டின் வேறு மாநிலத்தில் வசிப்பவர்கள் ஜம்மு காஷ்மீரில் நிலம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல ஜம்மு காஷ்மீரும் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதற்காகவும் ஜம்மு காஷ்மீரையும் இணைத்தது தான் இந்தியா என்பதை முன்வைத்தும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெரும் முயற்சிகளில் ஈடுபட்டது. அதிலும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த 370 சட்டப்பிரிவை தடை செய்து ஜம்மு காஷ்மீரின் மக்களையும் சுதந்திரமாக விடுவதற்கும் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள மக்களும் சுதந்திரமாக ஜம்மு காஷ்மீருக்கு சென்று வருவதற்கும் வழிவகை செய்ய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டிருந்தார். அதன்படியே மாநில அரசுக்கு இணையாக மாநில ஆளுநர் இருப்பார் என்று 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி குடியரசு தலைவர் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தம் செய்து உத்தரவு தெரிவித்தார்.
அதுவும் அந்த சமயத்தில் குடியரசு தலைவரின் ஆட்சியிலேயே ஜம்மு காஷ்மீர் இருந்தது அதனால் இந்த திருத்தத்திற்கு மாநில அரசின் ஒப்புதல் தேவையற்றதாக மாறிவிட்டது! அதோடு இந்திய அரசியலமைப்பின் அனைத்து விதிகளும் மற்ற மாநிலங்களுக்கு பொருந்துவது போல ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும் என்று குடியரசு தலைவர் மற்றொரு உத்தரவை பிறப்பித்தார். இதனால் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இப்படி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட உடனேயே அதனை எதிர்த்து பல மனுக்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டது. அதனால் 2019 உச்சநீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்த வழக்கை விசாரித்ததில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370 வது சட்டப்பிரிவை ரத்து செய்த குடியரசு தலைவரின் நடவடிக்கை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கிட்டத்தட்ட பாஜக தனது ஆட்சியை இரண்டாவது முறையாக அமைத்து ஒன்பது ஆண்டுகளாக முயற்சித்து ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. மேலும் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக கொண்டிருந்த ஜம்மு காஷ்மீரில் தற்பொழுது ஸ்ரீ ராமரின் உருவம் ஒளிருகிறது. அதாவது ஒரு காலத்தில் ஆண் மகனாக இருந்தால் ஸ்ரீநகர் லால் சவுக் பகுதியில் மூவர்ண கொடியை ஏற்றி காட்டு என்று தீவிரவாதிகள் கொக்கரித்துக் கொண்டிருந்தனர், ஆனால் இன்று அதே இடத்தில் ஸ்ரீராமர் ஒளிர்கிறார் என அப்பகுதியில் ஸ்ரீராமரின் பாடல்கள் மற்றும் டிஜிட்டல் போஸ்டர்கள் அமைக்கப்பட்டு வண்ணமயமான வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.