
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த வாரம் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. பிக்பாஸ் முதல் சீசனிலிருந்தே களைகட்டும் இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. மொத்தம் 100 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட், தானாக வெளியேறிய பவா செல்லதுரை போக மற்றவர்கள் எவிக்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் கடந்த வாரம் நடந்த கிராண்ட் பைனலில் விஜே அர்ச்சனா வெற்றி பெற்றார். அந்த வெற்றி தொடர்பாக பல தகவல் வந்த வண்ணம் உள்னன.
இந்த போட்டி தொடங்கியதில் இருந்து ஒருவருக்கொருவர் சண்டை போட்டுகொண்டும் மட்டும் மற்றவருடன் பேசாமலும் மக்கள் யாருக்கு ஆதரவு கொடுக்கிறார்களோ அவர்களின் பக்கம் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.அந்த வகையில் இந்த போட்டிக்கு பல கண்டனம் எழுந்தது, போட்டி ஒளிபரப்பக்கூடாது என்றும் கமல்ஹாசனை கோந்து தொகுத்து வருகிறது. பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருந்த பிக்பாஸ் தற்போது ஒளிபரப்புவது எல்லாம் குழந்தைகளுக்கு மாறாக உள்ளது என்றும் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் அந்த பிக் பாஸ் நடக்கும் இடத்தை முற்றுகையிடுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார். இப்படி பல எதிர்ப்புகளை தாண்டி கடந்த வரம் பைனல் நடந்து போட்டியாளருக்கு பரிசு பொருட்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டது.
இதுவரை இல்லாத சீசன்களில் நடந்து முடிந்த சீசனில் போட்டியாளர் வெற்றிபெற்றது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அந்த ஒரு போட்டியாளர் தான் வெற்றி பெறுவார் என்று நினைத்த போது அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்பியது. இதனால் வைல்ட் கார்டு மூலம் உள்ளே வந்தவர் அர்ச்சனா இவர் முதல் வாரத்தில் இருந்தே மக்கள் இடத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அழுதுகொண்டே இருந்ததால் சக போட்டியாளரான மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் கிண்டல் அடித்து வந்தனர். இதனால் அர்ச்சனா தன்னை புல்லி வைத்து பேசுவதாக குற்றம் சாட்டினர். அப்போது அவருடைய ரசிகர்களும் மாயா உடன் இருந் குழுவை புல்லி கேங் என்றே அழைத்து வந்தனர்.
அர்ச்சனா ஆரம்பத்தில் இருந்து தன்னை வெளிப்படுத்தி கொண்டு இருக்க பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்தபோது தட்டி கேட்டார். அதிலிருந்து அர்ச்சனாவுக்கு ஆதரவு பெருகியது, அர்ச்சனா மீது சக போட்டியாளர்கள் குற்றம் சுமத்தி வந்தனர். கமல்ஹாசனும் கண்டித்தார் இருப்பினும் மக்கள் இடத்தில் ஆதரவு குறைந்த பாடு இல்லை. மாயாவுக்கு கமல் உறுதுணையாக இருந்ததால் அவர் தான் வெற்றியாளர் என்று தீர்மானிக்க தொடங்கினர் நிகழ்ச்சியை ரிவியூ செய்பவர்கள். ஆனால், மாறாக அர்ச்சனா வெற்றிபெற்றது ஆச்சர்யமே அவருக்கு பரிசு தொகையாக ஒரு கார், 50 லட்சம், ஒரு வீடு மனை என அவரது சம்பளத்தை சேர்த்து மொத்தமாக 95 லட்சத்தை தனது வீட்டிற்கு எடுத்து சென்றார். இது அநியாயமான வெற்றி, பக்கா பி.ஆர். டீம் இருந்தால் நிச்சயம் வெல்லலாம். பிக் பாஸ் விளம்பர போட்டி என்பதை அர்ச்சனா நிரூபித்துள்ளளார் என சமூக தலத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் அந்த யுக்தியை தான் பயன்படுத்துகிறார்கள் அந்த வகையில் அர்ச்சனாவுக்கு முன்னணி நடிகர் ஒருவருடைய மகள் தான் உதவி செய்வதாக கூறப்படுகிறது. இதனை மூலம் அவருக்கு லட்சக்கணக்கான தொகை வருமானமாக கிடைப்பதாக கூறப்படுகிறது. இதுவரை வைல்ட் கார்டு மூலம் உள்ளே வந்தவர் வெற்றி பெற்றதாக அர்ச்சனாவை தவிர வேறு யாரும் இல்லை. அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த 15 லட்சத்து 40 ஆயிரம் கிடைத்த தொகையை அந்த பி ஆர் ஏஜென்ஸ்க்கு கொடுத்ததாக இணையத்தில் ஒரு தகவல் உலா வருகிறது. ஆனாலும், அவரது ரசிகர்கள் இது இல்லையென்று வாதம் செய்து வருகிறன்றனர். நேர்மையாக வெற்றி பெற்றதாக தெரிவித்து வருகிறன்றனர். இது எல்லாம் சக போட்டியாளர்கள் கண்டுகொள்ளாமல் வெளியில் வந்ததில் இருந்து இணையத்தில் சக போட்டியாளருடன் சன்னதி போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.