2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியலில் உள்ள கட்சிகள் தேர்தலுக்கான வேளைகளில் தீவிரமாக இறங்கி உள்ளன. இந்த நிலையில் சென்னையை பலமாக தாக்கிய மிக்ஜம் திமுகவிற்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. இருப்பினும் அதை மடை மாற்றுவதற்கு செய்ய வேண்டிய சில அறிவிப்புகளையும் திமுக தமிழக அரசின் அறிவிப்பாக வெளியிட்டு உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இது மட்டுமின்றி ஐந்து மாநிலங்களின் தேர்தல்களில் மூன்று மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன எதிர்ப்பு பேச்சு என்று கூறப்படுகிறது. எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து திமுக எந்த நேரத்திலும் விரட்டியடிக்கப்படலாம் என்ற சூழ்நிலை நிலவி வருவதால் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பெரும் அதிர்ச்சியை சந்தித்துள்ளனர்.
இதனால் திமுகவின் கூட்டணி கட்சிகள் எப்பொழுது அதிமுகவிற்கு பயணம் என்ற திட்டத்தை இருந்து வருகின்றனர் முன்னதாக அதிமுக பாஜகவின் கூட்டணி முறிந்து விட்டதாக அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியான சமயம் முதல் திமுக தனது கூட்டணி கட்சிகளை தன் பக்கம் வைத்துக் கொள்வதற்கு பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஏனென்றால் அதிமுக இதுவரை பாஜகவுடன் இணைந்த காரணத்தினால் மட்டுமே மற்ற கட்சிகள் அனைத்தும் திமுகவுடன் இணைந்து 2021 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது ஆனால் தற்பொழுது அதிமுக தனித்திருப்பதால் அதனுடன் கூட்டணி அமைக்க திமுகவின் கூட்டணி கட்சிகள் முனைப்பிலிருந்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுகவிலிருந்து விலகி ஓட முன்னோட்டம் பார்த்து வருகிறார் என தகவல்கள் கசிந்துள்ளது.
மேலும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க திருமாவளவன் முயற்சித்து வருவதாகவும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் மூன்றிற்கும் மேற்பட்ட தொகுதிகளை யார் விடுதலை சிறுத்தைகளுக்கு தருகிறார்களோ அவர்களின் கட்சியிலேயே விடுதலை சிறுத்தைகள் கூட்டணியை தொடரும் என்ற மறைமுக அறிவிப்பையும் திருமாவளவன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருமாவளவன் தரப்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது வெல்லும் ஜனநாயகம் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும், என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் வணக்கம், வெல்லும் சனநாயகம் மாநாடு' தவிர்க்கமுடியாத காரணங்களால் சற்று ஒரு வார காலத்திற்குத் தள்ளி வைக்கப்படுகிறது. அதாவது டிசம்பர் 23 அன்று நடைபெறுவதாக இருந்த மாநாடு டிசம்பர்_29 அன்றைக்கு நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.
அண்மையில் பெய்த கனமழை மற்றும் மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கடலோர மாவட்டங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. மக்கள் இன்னும் அந்தப் பாதிப்புகளிலிருந்து மீளமுடியாமல் பெரிதும் அல்லலுற்று வருகின்றனர். தமிழ்நாடு் அரசு, நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மாண்புமிகு முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற- நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றிவருகின்றனர். எனினும், மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் சில நாட்கள் தேவைப்படும் சூழல் உள்ளது. இந்நிலையில், அம்மாவட்டங்களில் நமது கட்சியின் மாநாட்டுப் பணிகளும் வெகுவாக தேக்கமடைந்துள்ளன.
எனவே, ஒரு வார காலத்திற்கு மாநாட்டைத் தள்ளிவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தோழர்கள் இதனை பொறுத்துக்கொள்வதுடன், மாநாட்டுப் பணிகளை மேலும் தீவிரப்படுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் பின்னணியை விசாரித்த பொழுது ஐந்து மாநிலங்களில் மூன்று மாநிலங்களை தன்வசமாகிய பாஜகவிற்கு அடுத்த குறி தென்னகம் தான் அதிலும் தமிழகம் தான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அடுத்த குறி என்ற தகவல் திருமாவளவனிற்கு தெரிந்த காரணத்தினால் தான் இந்த மாநாட்டை தள்ளி வைத்துள்ளதாகவும், மேலும் தென்னகத்தில் குறிப்பாக தமிழகத்தில் திமுகவுடன் இருந்தால் நமக்கும் தோல்வி உறுதியென அணி மாற இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.