மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் தான் கடந்த சில நாட்களாக ஊடகம் மற்றும் சமூக தளத்தில் தீயாக பரவி வந்தது. மன்சூர் அலிகான் மீது வழக்கு பாய்ந்தது உடனே அவர் மன்னிப்பு கேட்டதாக தகவல் வந்தன. இதனையெடுத்து அந்தச் விவகாரம் அப்படியே ஆஃப் ஆனது. தொடர்ந்து தன்னை அவமதித்து விட்டனர் என கூறி நஷ்ட ஈடு வேண்டியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை இன்று விசாரித்த நீதிமன்றம் மன்சூர் அலிகானுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
அக்டோபர் மாதம் வெளியான லியோ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த திரிஷா, அந்த படத்தில் மன்சூர் அலிகான் சிறிய காதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் விஜயின் ப்ளேஸ் பேக் காட்சி சொல்வது போல் இவருடைய காதாபாத்திரம் இருக்கும் இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான் லியோ படத்தில் திரிஷா உடன் பெட் சீன்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன் என்பது போல் கூறினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகை திரிஷாவும் இவரை போன்றவர்கள் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு சிரஞ்சீவி போன்ற திரை பட்டாளங்களும் திரிஷாவுக்கு ஆதரவாகவும் மன்சூர் அலிகானுக்கு எதிராகவும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என அதன் உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கூறியிருந்தார். இதனை தொடர்ந்து நடிகர் சீரஞ்சீவி உள்ளிட்டோர் மீது நஷ்ட ஈடு தொகை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில நீதிபதி " பொதுவெளியில் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்ளலாமா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. த்ரிஷா, மன்சூர் அலிகான் பேசியதற்காக, த்ரிஷா தான் மன்சூர் அலி கான் மீது வழக்கு தொடர வேண்டும். பொது வெளியில் மன்சூர் அலி கான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என மன்சூர் அலி கான் தெரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து இது போன்று சர்ச்சையான செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கதக்கது என நீதிபதி எச்சரித்தார். மேலும், எந்த தவறும் செய்யவில்லை என கூறும் மன்சூர் அலி கான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்". இதனையெடுத்து நீதிமன்றம் வழக்கை வருகிற 22ம் தேதிக்கு ஒத்திவைத்து.
நீதிமன்றம் சென்று தான் பேசியது சரி தான் என்பது போலும், தான் இதுவரை பேசியது ஏதும் தவறு இல்லை என்றும் நீதிமன்றம் சென்று ஒரு தொகையை வசூலிக்கலாம் என நினைத்து மாஸ்காட்ட சென்ற மன்சூர் அலிகானுக்கு சரியான பதிலடியயை கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஏற்கனவே தான் பேசியது தவறு என திரிஷாவிடம் மன்னிப்பு கோரியிருந்தார். ஆனால், தான் பேசியதை எனது விளம்பரதாரர் தவறாக புரிந்து கொண்டனர் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.